ரசிகன்!


மழை
தன் முதல் முத்தத்தினை
உச்சரிப்பதாய் தொடங்குகிறது
அவள் பிரவேசம்!

பின்னிரவுகளின் விடியலை
பனிமூட்டங்கள் நிர்ணயம் செய்ய
மெதுவே சோம்பல் முறிக்கும் காதல்!

விடாப்பிடியான அன்பில்
ஊடல் கூடல் என்பதாக
இரவு நனைக்க
விட்டது தொட்டது
எல்லாமே காதல் தான்!

காதல் எத்தனித்த ஆண்மையிடம்
ஒரு புன்னகையை காட்டி
வழிமறிக்கும் பெண்மையில்
சமுத்திரத்தையே குடித்துவிட்ட பொழுதுகள்
பரவசம்!

ஒரு தேவதை கதையில்
பிசாசு வருவதை எவரும் விரும்புவதில்லை...
நானும் விரும்பவில்லை...

காலம்...
அவள் பிரிதலுக்கு
ஒரு மௌனம் காட்டி
உயிரை வழியனுப்புதலில்
சமுத்திரத்தையே மூழ்கடித்துவிட்ட கண்ணீர்
விஷரசம்!

தானே மறந்துபோயும்
வருகை பதிவேட்டை
பூர்த்தி செய்ய மறப்பதில்லை நினைவுகள்!

போகுற போக்கில் தாகம் தீருமென்ற
காட்டாற்று தண்ணீராய்
இந்த நினைவுகளின் இல்லத்தில்
தாழ்ப்பாள் ஏதும் இல்லை...
கதவு திறந்து தானிருக்கிறது!

- ரசிகன்

நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112815&format=html



*
2 Responses
  1. KANA VARO Says:

    நல்ல கவிதை.


  2. //மழை
    தன் முதல் முத்தத்தினை
    உச்சரிப்பதாய் தொடங்குகிறது
    அவள் பிரவேசம்!//
    இங்க நிக்கிறீங்க நண்பா... அவ்ளோ அழகு...


    //காலம்...
    அவள் பிரிதலுக்கு
    ஒரு மௌனம் காட்டி
    உயிரை வழியனுப்புதலில்
    சமுத்திரத்தையே மூழ்கடித்துவிட்ட கண்ணீர்
    விஷரசம்!//

    அழகான வரிகள்...


    //தானே மறந்துபோயும்
    வருகை பதிவேட்டை
    பூர்த்தி செய்ய மறப்பதில்லை நினைவுகள்!//

    அட!!! அருமை!

    மொத்தக் கவிதையையும் மிக ரசித்தேன் நண்பா... வாழ்த்துக்கள்...


Post a Comment