ரசிகன்!


ஆழ் நித்திரை
என்பதென்னவோ
பொய்த்துப்போன விஷயம் எனக்கு!

நிலா ஒரு பக்கம்...
நீ மறுபக்கம்..
இடையிலமர்ந்து விடுகிறது
கவிதையெனும் காமம்!

நீ தள்ளிவிடுகிறாய்...
இரவு வெளிச்சத்தில்
ஒரு புள்ளியாகி விடுகிறேன்!

பெய்யெனப் பெய்கிறது
காதல்...
எனை எடுத்து வைத்துக்கொள்கிறாய்...

ஒரு கையால்
தலைகோதி
மறுகையால் தட்டிக்கொடுக்க
கால் மடித்து தூங்குகிறேன்
உன் உள்ளங்கையில்...

காதலுக்கும்
காமத்துக்குமான
இச்சிறிய இடைவெளியில்
என் தூக்கம்
ஒரு அழகான பின்னணி இசையோடு
புணர்ந்து கொண்டிருக்கிறது!


-ரசிகன்

நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12814:2011-02-03-23-27-18&catid=2:poems&Itemid=265


-------

விகடன்

http://new.vikatan.com/article.php?aid=2579&sid=78&mid=10

*
6 Responses
  1. ஸ்ரீ Says:

    U keep on impressing me Satish. Good


  2. Priya Says:

    ரசனையான வரிகள்.. அழகான கவிதை!


  3. @ஸ்ரீ

    அடித்தளம் போட்டதுல குறிப்பிட பட வேண்டிய "தல" நீங்க :-)


  4. @Priya:

    வாசித்து ரசித்தமைக்கு ரசிகனின் நன்றிகள்! :-)


  5. vaazhthukal.
    mullaiamuthan.
    ttp://kaatruveli-ithazh.blogspot.com/


  6. நன்றி
    முல்லை அமுதன் :-)


Post a Comment