ரசிகன்!


தாளத்துக்கேற்ற நடனம்
வசிய பார்வை
விஷம புன்னகை
மழலை பேச்சு…

அடிமை பட்டுக்கிடக்கும்
ஒரு ரசிகனாய்
நீ ரசிக்க
பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க
பிடித்துத் தருகிறேன் காதலாய்…

கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க
சிறகில் ஒன்று உடைந்து போகிறது…
அருவருப்பாய் தூக்கி எறிகிறாய்
அதிலிருந்த சிவப்பொன்று
என் முகத்தில் தெறிக்க

வண்ணமா ரத்தமா?
பாவத்தின் அச்சத்தோடு
தலையில் கை வைத்தமர்கிறேன்!

சாக துடிக்கும் அப்பூச்சியின்
கன்னங்களை அள்ளி பார்த்திட
அதன் மர்ம புன்னகை
என் முகத்தில் அறைந்து இறக்கிறது..
கண்ணீர் சிலுவையில் நான்!

- ரசிகன்

நன்றி
திண்ணை
http://puthu.thinnai.com/?p=924

நன்றி
விகடன்

*
7 Responses
  1. காதலும் கருனையும் பட்டுத்தெரிக்கிறது கவிதையில்...

    அசத்தலான கவிதை..
    வாழ்த்துக்கள்..


  2. //அதன் மர்ம புன்னகை
    என் முகத்தில் அறைந்து இறக்கிறது..
    கண்ணீர் சிலுவையில் நான்!//அருமை .


  3. நன்றி சௌந்தர் சார்!


  4. நன்றி ராஜேஷ்! :-)


  5. Anonymous Says:

    இரசிகன் நான உங்கள் இரசிகன்
    காதலின் மென்மை-இக்
    கவிதை காட்டுவது உண்மை
    வாழ்த்துக்கள்
    புலவர் சா இராமாநுசம்
    புலவர் குரல்


  6. Krishna Says:

    அழகாக இருக்கிறது கவிதை..

    வாழ்த்துக்கள்..

    தொடருங்கள்....


  7. நன்றி

    கிருஷ்ண குமார் :)

    புலவர் சா இராமாநுசம் :)


Post a Comment