ரசிகன்!



மேகங்களை
புழுங்கச் செய்து விட்டு
மஞ்சம் மிச்சப்படுகிறது!

பூ மழையென
சாரல் பூக்க...
பூத்திருந்த பட்டாம்பூச்சிகள்
நனைந்தபடி
உன்னை சுற்றி படையெடுக்கும்!

கூடவே
வானவில்லும்
இடை நெளிந்து வர
அட... சேலையில் அது நீ தான்!

பிறகென்ன...
காலங்கள் கை கட்டி நிற்க
சொர்க்கங்கள்
பக்கம் வந்து விடுகிறது!
தற்சமயம்..
என் உலகம்
அதுவாகவே மாறிவிட
உன் இருப்பு வெப்பமயமாகிறது
சூடாய்
ஒரு ஐஸ் கிரீம் போல!

என் அருகில் அமர்ந்து
ஒற்றை விரலால்
என் தொடையை நிண்டிக்கொண்டே
நீ தோள் சாய்ந்து கொள்ளும்
அத்தருணம் போதுமெனக்கு!

காதல்.... காதல் தான்!
-
ரசிகன்

*
ரசிகன்!



தெரு நாய்களின்

குரைத்தலுக்கு

நடுக்கம் காணும் ஜன்னல் கதவுகள்!

வியர்த்தலுக்கு

ஈடுகொடுக்க முடியாத

மின் விசிறி மலட்டுத் தன்மையில்...

உச்சி நுகர்ந்திருக்கும் போர்வை

சடாரென விலக்க...

பேயாட்டம் போடும்

பதிண்வயது உணர்வுகளின்

மொத்த உணர்ச்சிகள்!

மற்றபடி.,

பழுப்பு நிற

ஜீரோ வாட் குண்டு பல்பும்

லேப் டாப்பில் ஒலிக்கும் பழைய பாடலும்

எழுந்து உட்கார வைத்து விடும்!

கொழுந்து விடும்

இந்நட்ட நடு இரவுகளின்

தாகங்கள்...

தலைமாட்டிலிருக்கும்

ஒரு டம்ளர் தண்ணீரில்

தணியப்போவதில்லை!


-ரசிகன்

*
நன்றி,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311012315&format=html


நன்றி
அதீதம்!
http://www.atheetham.com/naduiravu.htm

*
ரசிகன்!


ஒரு
மிச்சப்பட்டிருந்த நாற்காலி
பரஸ்பரம் பேசுகிறது!

மூன்றாண்டுக்கு பின்
பார்க்கும் முகம் என்றோ
காதல் அறிமுகப்படுத்திவிட்ட
மனசு என்றோ

ஒரு சலனமுமின்றி
புன்னகைத்து திரும்பிக்கொண்டது
அந்த நாற்காலி!

நலம் விசாரிக்கையில்
ஓலமிட்ட அவள் கைபேசிக்கு
என் அனுமதி கேட்கிறாள்....

இங்கிதம் தெரிந்தவள்..
சங்கடங்கள் விரும்புவதில்லை...

எனக்கு
பிடித்தமான கவிதையையும்
அவள் விரும்பியது இல்லை!

நாற்காலி
மீண்டும் மிச்சப்பட்டிருந்தது!

- ரசிகன்

நன்றி!
கீற்று...

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12356&Itemid=265
ரசிகன்!



எப்படியும்

தன் கைகளால்

முகத்தை மூடிக்கொள்வாள்

என் பார்வைக்கு!


அவள் கைகளை விலக்குவதா..?

என் பார்வையை விலக்குவதா?


சிவந்து போகும் வெட்கத்தில்

அவள் இருப்பாள்...

ஏமாந்து போகும் ஏக்கத்தில்

நான் இருப்பேன்!


எப்படியும்

ஒரு விரல் இடுக்கில்

எட்டிப்பார்த்திடுவாள்...

நிலாக்கள் சட்டென வழுக்கி விழும்!


நான் சுதாகரித்துக்கொள்ள

அவள் தலை குனிந்து விடுவாள்...


அவள் கன்னங்களை கிள்ளி

அப்படியே அள்ளிக்கொள்ளுதல்

அலாதி ப்ரியம் எனக்கு!


-ரசிகன்


நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311010215&format=html


*