ரசிகன்!சந்தர்ப்ப வசத்தில்

பகிரங்கமாய் ஒன்றிய

இரு இதழ்களின் பின்னணியில்...

மலர்ந்திருந்தது ஒரு முத்தப்பிழை!


கால்கள் வேரூன்ற..

திருத்தம்...

காதல் வேரூன்ற..

கண்ணா பின்னாவென ஈடேறியது வயசுப்பயணம்!


உடல் சொன்னதை

மனசு கேட்கும் அவலம்!

காடு மலை பாதையெல்லாம்...

ஸ்பரிசத்தின் நிழற்குடை எனலாம்!


கால வெறியாட்டத்தில்...

பிச்சு எறியப்பட்ட மனதின்

அழுகுரல் மரண ஓலம்... !


உயிர், மெய் விடுபட

வார்த்தைகள் முடக்கப்பட்டு

மௌனம் திண்ணும் காட்சியில்...


எதேச்சையாய் விளையும்

சில அங்கீகரிக்கப்படாத நட்புகள்!


பாரம் தாங்காது

தோள் சாய விழைகையில்...

நட்பு உறைந்து விடுகிறது

தன் உள்ளங்கையில் பதிக்கும் ஈர முத்தத்தில்...


நட்பு அங்கீகரிக்கப்படுவதாய் எண்ணி

மீண்டுமொரு முத்தப்பிழை...!


- ரசிகன்

***

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009266&format=html

*