Showing posts with label நினைவு. Show all posts
Showing posts with label நினைவு. Show all posts
ரசிகன்!


"
இதயத்தின்
சிறிய துளைதனில்

நுழைய முயற்சிக்கும்
சுவாசக்காற்று

நினைவுகளின்
வெப்பம் தாளாமல்
சட்டென வெளியேறிவிடுகிறது!

பதற்றத்தில்
சில வினாடிகள்
ஒன்றுமே புரிவதில்லை..

எழுத நினைத்த
வார்த்தைகளும்
குழப்பத்தில்
பின் வாங்கிக்கொண்டன!

ஒரு வேளை...
இந்நிலை
உங்களுக்கு புரிந்திருக்க கூடும்
என்ற எண்ணமோ என்னவோ!
ரசிகன்!

உனை பார்க்க
பேருந்து நிறுத்தத்தில்
நான்!

ஐயோ!
தோழிங்க எல்லாம் இருக்காங்க,
பார்த்துட போறாங்க
போ!!! போ !!!
என்றாய் பதற்றத்துடன்!

நான்
செல்கையில்
நீயும்
பின்னாடியே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்!

நினைவிருக்கிறதா?
-----------------

நிலாச்சாரல் : http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
ரசிகன்!
















அது
ஒரு மழைக்காலம்!

நான்
காலைல கொடுத்த
கடிதம் பத்தி......
என் இழுத்தாய்!

உனக்கு
வெட்கமா இல்லையா என்றேன்!

அழுகிறாய்!
உன்னோடு சேர்ந்து வானமும்!

ஏன் அழற?
கொஞ்சம்
வெட்கப்பட்டு கேட்டிருந்தா
நல்லா இருக்குமே என்றேன்!

வெட்கத்தில்
கலைந்து போனது மேகம்!
உன் முகமும் தான்!

நினைவிருக்கிறதா?
ரசிகன்!

"
என்
மனித வாழ்வில்
நிரந்தரம் என்று
எதுவுமில்லை!

உன்
நினைவை தவிர!"
ரசிகன்!

என்
மனதை மீறி
வெளிப்படும்
ஒவ்வொரு நினைவும்

எல்லை
தாண்டிய பயங்கரவாதம்!
ரசிகன்!

கடிதத்தின்
முதல் வரியில்
அன்புக்குரிய!

கடைசி வரியில்
அன்புடன்!

இடைப்பட்ட
வரிகளில்
உன்
நினைவுகளுடன்

-ரசிகன்
ரசிகன்!

"
என்
வழி தெரியா
பயணத்தில்
உன்
நினைவுகள்
என் வழிகாட்டி!!!
ரசிகன்!

"
நான்
பயணிக்கும்
பாதை நெடுகிலும்

சாலையோர
மரங்களில்
உன் நினைவுகள்
எனக்காய் பூத்திருக்கும்!"