ரசிகன்!
ஒரு காமம்

தலைக்கேறியிருந்தது...

ஊரறியா நாற்சுவரில்

உலகம் அடங்கிப்போயிருந்தது...


ஒரு காதல்

சலசலத்துப்போயிருந்தது...

ஆர்ப்பரிக்கும் உடல் பேச்சுக்கள்

அடக்கமாய் போர்த்தியிருந்தது!


ஒரு தனிமை

மௌனித்திருந்தது....

நண்பகல் வேளையிருக்கும்

மது வாசம் வீசிக்கொண்டிருந்தது...


ஒரு இரவு

வெடவெடத்துப்போயிருந்தது...

காற்றாடி அசைவிழந்தும்

நாற்காலி தலைகுனிந்தும் வீற்றிருந்தது!


ஒரு பகல்

இழவாகி போயிருந்தது....

சுற்றமும் நட்பும்

ஒரு பிரிதலுக்கு தயாராகியிருந்தது!


ஒரு கவிதை

கனத்துப்போயிருந்தது...

.....

.....

.....

சங்கதி என்னவாயிருக்கும்?

*

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31007189&format=html
ரசிகன்!



ஓரிரவுக்கு ஒன்றென
பதின் வயது போட்ட கணக்கு
ஆயிரங்காதல் கதை...

பேசும்
பெண்ணின இரவுகள்
உறங்குவதே இல்லை...
விடியலும் மடி சாய
சுடுமண்ணிலும் காதல் வாசம்!

வீரியம் விரிவடைய
வெட்டுண்டு போயின
காதலும் நட்பும்!

மனங்கள் வேரறுக்கப்பட்ட நிலையில்...
புதியன புதியதாய்
இலைமறை காதல்
இது மூன்றாம் பாலினம்!

நட்பை
காதல் புரியா ஒரு நிலையில்..

அவனோ அவளோ
பிண்ணப்பட்டிருந்த மாயவலையில்...
சிக்கி
சின்னாபின்னமாய் போயிருந்தன
நட்பின் செல்லப்பெயர்கள்!

தோழி துவங்கி
தோழன் ஒதுங்க....

ஒரு அவன்
ஒரு அவளுக்கு
ஒரு இராக்கவிதை!


-ரசிகன்


நன்றி
திண்ணை!

*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31007116&format=html
ரசிகன்!


காதல் சபிக்கப்பட்ட
ஒரு பேனா முள்ளில்
பெண்மை உமிழும் அகராதி
காதலி!

இக்கவிதை...
நமக்கானதாய் புனரமைக்கப்பட்ட பூமி!
வெண்ணிற நிலவும்
செந்நிற ஆப்பிள்களும்
தடை செய்யப்பட்ட
இந்நட்சத்திர தோட்டத்தில்

நீயென நான்
நானென நீ
கவிதையென எழுதி முடிக்க
காதலென கொஞ்ச வார்த்தைகள்!

தூறல் விழும்
சிறு மழை காட்டில்
ஊடல் அவ்வப்பொழுது நனைந்துவிட்டுப்போகும்!

பெண்மை பேசும்
புது வெட்கம் போல
சலனம் எப்போதாவாது பொய் பேசிப்போகும்!

அவள் அன்றி அவளாடை
தீண்டி விடும்
காற்றோ, புல்லோ , பூக்களோ
எந்நேரமும் ரீங்காரமிடும் காதலிசையென!

பகலுக்கு இரவின் மீதிருக்கும்
தீராத ஆசையையும்

இரவுக்கு பகலின் மீதிருக்கும்
தீராத பகையையும்

எழுதி முடிக்க வார்த்தைகளற்று
களைப்புற்று இளைப்பாற

கண் விழித்து பார்க்கையில்
காதலி மடியில் துயில் கொண்டது
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

- ரசிகன்

*

நன்றி!
கீற்று..

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9876:2010-07-07-04-38-45&catid=2:poems&Itemid=265

*
ரசிகன்!



தெருமுனை காத்திருப்பில்
தினம் தினம்
உன் வருகைக்காய் நான் !

தோழிகளும்
புத்தகமுமாய்
கை வீசி
கலகலப்பாய்
பேசி வருவாய் நீ...

அன்றொரு
மிகைப்படியான மாலை பொழுதில்

எனை
கடக்கையில் மட்டும்

பார்வைகளை
கட்டாயப்படுத்தி திசை திருப்பி

புத்தகத்தை
மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டாய்...

புது
காதல் உணர்வோடு நீ!

உன் உணர்வறியா
குற்ற உணர்வோடு நான்!

-
ரசிகன்!
ரசிகன்!



என்
வலதுபுறம்
நடந்துகொண்டு நீ!

உன்
ஒவ்வொரு அடியிலும்

இடதுபுறம்
உடைந்துகொண்டு நான்!

*

நன்றி
நிலாச்சாரல்