
தாளத்துக்கேற்ற நடனம்
வசிய பார்வை
விஷம புன்னகை
மழலை பேச்சு…
அடிமை பட்டுக்கிடக்கும்
ஒரு ரசிகனாய்
நீ ரசிக்க
பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க
பிடித்துத் தருகிறேன் காதலாய்…
கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க
சிறகில் ஒன்று உடைந்து போகிறது…
அருவருப்பாய் தூக்கி எறிகிறாய்
அதிலிருந்த சிவப்பொன்று
என் முகத்தில் தெறிக்க
வண்ணமா ரத்தமா?
பாவத்தின் அச்சத்தோடு
தலையில் கை வைத்தமர்கிறேன்!
சாக துடிக்கும் அப்பூச்சியின்
கன்னங்களை அள்ளி பார்த்திட
அதன் மர்ம புன்னகை
என் முகத்தில் அறைந்து இறக்கிறது..
கண்ணீர் சிலுவையில் நான்!
- ரசிகன்
நன்றி
திண்ணை
http://puthu.thinnai.com/?p=924
நன்றி
விகடன்
*
முன்பொரு கவிதைகளில்
இல்லாத ஓர் உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...
மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!
நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?
அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!
அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...
பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?
ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...
என் ரெண்டுங்கெட்டா மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில்...
அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!-
ரசிகன்நன்றி
யூத்ஃபுல் விகடன்!
http://new.vikatan.com/article.php?aid=5290&sid=151&mid=10நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13488:2011-03-10-10-21-09&catid=2:poems&Itemid=265ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*

எனதைந்தாம் சந்திப்பில்
அவள் தவற விட்டுச்சென்றது!
வெள்ளை நிறம் கொண்டது...
ஒரு ரோஜாப்பூ பூத்திருக்கும்
நாணமதை
எத்தனை முறை கசக்கினாலும்
மடிப்பாய் அமையப்பெற்றிருக்கும்!
அவள் உள்ளங்கை தாய்வீடு
வெட்கம் சிந்துமிடம் அந்தப்புரம்
கண்ணீரில் தாமரையிலை
காதல் கொண்டால் மறைபொருள்!
நேரம் காலமேதுமின்றி
வெட்கம் வந்து கதவு தட்டும்
மூடி மறைத்திட முடியாது
முடிந்து வைத்துக் கொள்வாள்!
ஆம்!
எனதைந்தாம் சந்திப்பில்
அவள் கொட்டிச் சென்ற
முதல் வெட்கத்தை கட்டியணைத்தபடி
கட்டில் துயில் காணும்
அவள் தவறவிட்ட கைக்குட்டை!
***
நன்றி!
யூத்ஃபுல் விகடன்
---

"
பிஞ்சு விரல்களின் பிடியில்
சிலேட்டு பரப்பில்
கரையத்தொடங்கும் பல்பம்!
அம்ம்ம்ம்ம்மா......
என உச்சரித்தவாறு
வட்டங்களை வரையும்
பல்ப முனைகள்!
முதலிரண்டு கண்ணாம்,
கீழ்
கொஞ்சம் நெளிந்தவாறு மூக்காம்,
அடுத்து
இரு கோணல் கோடிட்டு வாயாம்!
இது பொட்ட்ட்டு.....
என்றழுத்தியதில்
உடைபட்டுப்போனது
பல்பம் இரண்டாய்!
உயிரொன்று குறைகிறதென்று
பால்யத்தின் உச்சத்தில்
சிலேட்டில்
பதிக்கிறதொரு ஈர முத்தம்-
பல்ப துகள்களை
ருசிக்க தொடங்கியவாறு!
-ரசிகன்
நன்றி!!!
யூத்புல் விகடன்!
***
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem070510.asp

அது
அவளாய் தான் இருக்கக்கூடும்!
ஆழ் நித்திரையில்
மெல்லிய இழைக்காற்று
கவிதை பேசுவதும்,
நினைவுகளை கையகப்படுத்தி
கனவுகளை திரை போடுவதும்,
போர்த்திய போர்வையை
கால் மாட்டில் இழுத்துவிடுவதும்,
நிச்சயம்
அவளாய் தான் இருக்கக்கூடும்!
நாளை
எப்படியும்
அவளிடம் சொல்லிவிடுவதென்ற
தீர்மானத்தோடு
ஒவ்வொரு இரவும் விடைபெறுகிறது!
-ரசிகன்!
.
நன்றி....
யூத்ஃபுல் விகடன்!!!
.
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem120410.asp

ஒரு
ஞாயிறு மாலை;
அந்தி உடல் போர்த்தும் வேளை!
வீடு விட்டு
வெளியில் வருகிறேன்,
முன் பின் அறிமுகமில்லாத நீ
யாரென்றே தெரியாத நான்!
குளிர்காலம்
தாளம் போட
ஐஸ்மழை கொட்டிய சாலையில்
கொஞ்சலாய் வருடும் ஈரப்பதம்!
நீ
கால் தடங்களை
மேலோட்டமாய் வரைந்து செல்கிறாய்!
நான்
என் தடம் கொண்டு
அழுத்தமாய் பதிவு செய்தபடி வருகிறேன்!
மெதுவாய் தான் நடந்து வந்தாலும்
மனசு வேகமாய் ஓடிவந்து
மூச்சு வாங்கியபடி,
சாலையை கடக்க நிற்கும்
உன் பக்கம் வந்து நிற்கிறது!
ஏனோ!
சின்னதாய் ஒரு புன்னகை பூக்கிறாய் நீ!
ஏதோ!
உலகை வென்ற இறுமாப்பில் - ரசிகன்!
------------------------------------
நன்றி
யூத்புல் விகடன்!!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/duraipoem230310.asp