ரசிகன்!


*
விரல்களின்
இடுக்குகளில் ஊடுறுவியவாறு
கடந்து செல்கிறது சாலை...


ஒருபுறம் அவளும்
மறுபுறம் நாணமுமென
வாய் மொழிகளுக்கு வழி கொடுக்காது
அடைத்து செல்ல முயன்றபடி காதல்!


விழிகளின் பார்வைகளினூடு
புரிதலும் புணர்தலும்
பக்குவப்பட்டு பேசிக்கொள்ள


ஒரு வழியாய்
பற்றிக்கொண்டாள்
அழுத்தமாய் ஐவிரல்களை...!


மஞ்சம் அடைந்த மிகுதியிலும்
பேச வார்த்தை கிடைக்காது
மௌனம் மட்டுமே பயணிக்கிறது
விரல்கள் விடுபடும் தூரம் வரையில்!!


-ரசிகன்

நன்றி
திண்ணை!!!

*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004255&format=html
*
ரசிகன்!


"
காத்திருப்புகளின் பயணக்களைப்பில்
இளைப்பாரிக்கொண்டிருந்தன
அவள் சார்ந்த நினைவுகள்!!!

முத்தங்களை தாங்கிப்பிடித்தபடி
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
நிலா வடிவ சுவர் கடிகாரம்...

அறை நெடுக
விழி படும் இடமெல்லாம்
குமிழும் அவள் கூந்தல் ஈரம்...

அவள் கொஞ்சல் மொழிகளை
மௌனமாய் உச்சரித்து விளையாடும்
அந்த தலையாட்டு பொம்மை...

மறுபுறத்தில்
விசிறியின் உந்துதலுக்கு
வெட்கமறியா சில காகிதங்கள்
ஒன்றை ஒன்று உரச
ஒரே கூச்சலும் குழப்பமுமாய்....

இடையிடையில்
காதல் வேட்கையில்
திட்டுத் திட்டாய் சில தணிக்கை வெட்டுக்கள்...

உதறி எழுந்து
இயல்பு நிலைக்கு திரும்புகையில்...

கலவரமறியாது
இசையெழுப்பிக் கொண்டிருந்தது
ஜன்னலின் திரைசீலை....

-ரசிகன்

-----------------

நன்றி!
கீற்று...


---> http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6882:2010-04-25-04-20-18&catid=2:poems&Itemid=265
ரசிகன்!

"
பார்வைகள்
சரிந்து விழ...
வெட்கங்களாய் பூத்து எழுகிறாய்....

வெட்கத்தில்...

பேச வந்த வார்த்தைகள்
இதழ் தொட்டுவிட்டு
வந்த வழி செல்லும் உன் கழுத்தோடு
என் பார்வையும் செல்ல

ஆடை சரி செய்கிறாயே
இதில் நியாயம் என்னடி?
ரசிகன்!


அடியே...

உன்னில்
காதல் சொன்ன போது...

வார்த்தைகளை முழுங்கிவிட்டு

நிமிர்ந்து
ஒரு முறைப்பும்

குனிந்து
ஒரு வெட்கமும் தருகிறாயே...

இதை
நான் எப்படி எடுத்துக்கொள்ள?
ரசிகன்!

இருட்டணைத்த மொட்டைமாடியில்
முதலில்
ஒரு வால் கொண்ட விண்மீன் தான்
போரிட எத்தனித்திருந்தது!
மின்னல் வேகத்தில்
மடிந்து போனது
மற்ற மீன்களுக்கு
ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்!

சீற்றத்துடன்
வெள்ளொளியை கக்கியவாறு
ஆணவத்துடன் முதல் அடி எடுத்துவைக்கிறாள்
வெண்ணிலா!

பின்னடி வைக்காமலே
விண்மீன்கள் ஒன்றுவிடாமல்
பின்வாங்கி கொண்டன!

நீயா நானா என்ற
தீர்மானம் கொண்டு
அவள் நெருங்கிவரவும்

என்னவள்
தலை சுற்றியிருந்த
நூலாடை மெல்ல நழுவவும்
சரியாய் இருந்தது!

தோற்ற பொலிவில்
தோற்றுப்போனவள்
ஒத்துக்கொள்ளாமல் ஒளிந்துகொண்டாள்
மேகமூட்டத்தினூடே!

-ரசிகன்!

நன்றி வார்ப்பு!!!
http://vaarppu.com/view/2143/
ரசிகன்!

அது
அவளாய் தான் இருக்கக்கூடும்!

ஆழ் நித்திரையில்
மெல்லிய இழைக்காற்று
கவிதை பேசுவதும்,

நினைவுகளை கையகப்படுத்தி
கனவுகளை திரை போடுவதும்,

போர்த்திய போர்வையை
கால் மாட்டில் இழுத்துவிடுவதும்,

நிச்சயம்
அவளாய் தான் இருக்கக்கூடும்!

நாளை
எப்படியும்
அவளிடம் சொல்லிவிடுவதென்ற
தீர்மானத்தோடு
ஒவ்வொரு இரவும் விடைபெறுகிறது!


-ரசிகன்!
.

நன்றி....
யூத்ஃபுல் விகடன்!!!
.
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem120410.asp
ரசிகன்!


நன்றி கீற்று!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5200:2010-04-07-05-37-21&catid=2:poems&Itemid=265
ரசிகன்!


நன்றி கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5200:2010-04-07-05-37-21&catid=2:poems&Itemid=265
ரசிகன்!


நன்றி கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5200:2010-04-07-05-37-21&catid=2:poems&Itemid=265
ரசிகன்!


"
கரையேற்றப்பட்ட
அந்த
கட்டுமரத்தின் நிழலில்
கரைய தொடங்கிய மௌனங்கள்...

உனது காதலை
நீ
சொல்லி முடித்தாகி விட்டது..

அலைகள் நீ
கரையென நான்..
தீர்ந்த நுரைகளில்
எதை விட்டுச்செல்கிறோமென விடைபெறுகிறோம்!

இரவின்
விழுங்க முடியா பசியோடு
இழுத்து போர்த்திய போர்வைக்குள்
அவள்
கொட்டிய வார்த்தைகளும்
காட்டிய உணர்வுகளுமாய்.....

ஐம்புலன்களை
காதல் செய்ய முயற்சிக்கும்
ஒரு வினோத இரவு!

வசமாய் சிக்கிய கைதியாய்
தலைமாட்டிலிருந்த தலையணை
நைசாய் நழுவி

அவள் இடத்தை நிறைவு செய்கிறது!!!


நன்றி கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5054:2010-04-01-08-38-33&catid=2:poems&Itemid=265