
அன்று
நம் காதலுக்கு
மூன்று வயது!
பரிசாய்
எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!
உரையாடிய
இதழ்கள்
உறவாட ஆரம்பித்தன!
போதும் என்றாய்!
நினைவிருக்கிறதா?
*
நன்றி!
நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/10120906.asp

கடற்கரை மணலில்
என்
பாதச்சுவடுகளில்
நீ
கால் பதித்தபடி வந்தாய்..
இடையில்
நீ
நின்று விட
கால்
வலிக்குதா என்றேன்...
இல்லை இல்லை...
காதலிக்கிறேன் என்றாய்..
நினைவிருக்கிறதா ?
*
நன்றி!
நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/10120906.asp

உனை பார்க்க
பேருந்து நிறுத்தத்தில்
நான்!
ஐயோ!
தோழிங்க எல்லாம் இருக்காங்க,
பார்த்துட போறாங்க
போ!!! போ !!!
என்றாய் பதற்றத்துடன்!
நான்
செல்கையில்
நீயும்
பின்னாடியே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்!
நினைவிருக்கிறதா?
-----------------
நிலாச்சாரல் : http://www.nilacharal.com/ocms/log/10120906.asp