(5)
ரசிகன்!



"
ரோஜா!

இதழ்களை
களைவது காதல்!

முட்களை
களைவது நட்பு!
(4)
ரசிகன்!

"

மழையில்
நனைந்து விடுவது
நட்பு!
.
மழையை
நனைத்து விடுவது
காதல்!
.
(3)
ரசிகன்!



"

விடியலுக்கு
காத்திருக்கும் நட்பு!
.
இரவுக்கு
ஏங்கி நிற்கும் காதல்!
(2)
ரசிகன்!



"
பார்க்கும்போதெல்லாம்
புன்னகை அது
நட்பு!
.
பேசும்போதெல்லாம்
வெட்கம் அது
காதல்!
(1)
ரசிகன்!




"
ஒரு தட்டில்
இரு கை சோறு நட்பு...

ஒரு
கையில்
இரு வாய் சோறு காதல்!
ரசிகன்!















"
வந்து
போய் கொண்டிருக்கிறார்கள்...

கட்டப்பட்ட
கால் கட்டை விரல்கள்,

மூக்கடைத்த
வெண் பஞ்சு என

அடையாளம்
காட்டி

எண்ணி அழுவதும்
துக்கம் விசாரிப்பதுமாய்

இயல்பாய்
வந்து
போய் கொண்டிருக்கிறார்கள்...
ரசிகன்!


"
இதயத்தின்
சிறிய துளைதனில்

நுழைய முயற்சிக்கும்
சுவாசக்காற்று

நினைவுகளின்
வெப்பம் தாளாமல்
சட்டென வெளியேறிவிடுகிறது!

பதற்றத்தில்
சில வினாடிகள்
ஒன்றுமே புரிவதில்லை..

எழுத நினைத்த
வார்த்தைகளும்
குழப்பத்தில்
பின் வாங்கிக்கொண்டன!

ஒரு வேளை...
இந்நிலை
உங்களுக்கு புரிந்திருக்க கூடும்
என்ற எண்ணமோ என்னவோ!
ரசிகன்!


உன்
கழுத்தினை வருடும்
செயினை எடுத்து
கடிக்கின்றாய் வெட்கத்தில்-

என் பற்கள் கூசுகின்றன!

அதை விடு...

நீ
நகங்கள் மெல்ல
கடிக்கும்போது

தெரியுமா?

ஏனோ
என்
விரல்கள்
நாணம் கொள்கின்றன!

நீ
என்னை
திரும்பி பார்க்கையில் எல்லாம்

என்னை
கண்ணாடி பார்க்க செய்கின்றாய்!

நீ
தெய்வம் வணங்க
கோயில் படி ஏறுகையில்

என்னை
காதலை வணங்க செய்கின்றாய்!

சொல் பெண்ணே!

இவை பழக்கமா?
இல்லை இனி என் வழக்கமா?
ரசிகன்!

உனை பார்க்க
பேருந்து நிறுத்தத்தில்
நான்!

ஐயோ!
தோழிங்க எல்லாம் இருக்காங்க,
பார்த்துட போறாங்க
போ!!! போ !!!
என்றாய் பதற்றத்துடன்!

நான்
செல்கையில்
நீயும்
பின்னாடியே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்!

நினைவிருக்கிறதா?
-----------------

நிலாச்சாரல் : http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
ரசிகன்!

"

ஆடை
உரிந்தவள் நீ!

களைந்து
போனது நான்!

வெட்கத்தில்
காதல்!
ரசிகன்!

ஒரு
ஞாயிறு மாலை;
அந்தி உடல் போர்த்தும் வேளை!

வீடு விட்டு
வெளியில் வருகிறேன்,
முன் பின் அறிமுகமில்லாத நீ
யாரென்றே தெரியாத நான்!

குளிர்காலம்
தாளம் போட
ஐஸ்மழை கொட்டிய சாலையில்
கொஞ்சலாய் வருடும் ஈரப்பதம்!

நீ
கால் தடங்களை
மேலோட்டமாய் வரைந்து செல்கிறாய்!
நான்
என் தடம் கொண்டு
அழுத்தமாய் பதிவு செய்தபடி வருகிறேன்!

மெதுவாய் தான் நடந்து வந்தாலும்
மனசு வேகமாய் ஓடிவந்து
மூச்சு வாங்கியபடி,
சாலையை கடக்க நிற்கும்
உன் பக்கம் வந்து நிற்கிறது!

ஏனோ!
சின்னதாய் ஒரு புன்னகை பூக்கிறாய் நீ!

ஏதோ!
உலகை வென்ற இறுமாப்பில் - ரசிகன்!
------------------------------------

நன்றி
யூத்புல் விகடன்!!!

http://youthful.vikatan.com/youth/Nyouth/duraipoem230310.asp
ரசிகன்!

"
உன்
மனதுக்கும்

என்
மனதுக்குமான

முரண்பாட்டில்
ஒன்றிப்போனது தான்

நம் நட்பு!
ரசிகன்!

"
என்
ஊனமுற்ற மனதை
சிறகடிக்க வைக்க

நீ
தானமாய்
கொடுத்தது தான்

இந்த நட்பு!
ரசிகன்!



"
நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!

என்னை
கொள்ளை கொள்ள
போகிறாய் என்று!
"
ரசிகன்!
















அது
ஒரு மழைக்காலம்!

நான்
காலைல கொடுத்த
கடிதம் பத்தி......
என் இழுத்தாய்!

உனக்கு
வெட்கமா இல்லையா என்றேன்!

அழுகிறாய்!
உன்னோடு சேர்ந்து வானமும்!

ஏன் அழற?
கொஞ்சம்
வெட்கப்பட்டு கேட்டிருந்தா
நல்லா இருக்குமே என்றேன்!

வெட்கத்தில்
கலைந்து போனது மேகம்!
உன் முகமும் தான்!

நினைவிருக்கிறதா?
ரசிகன்!

"
என்
மனித வாழ்வில்
நிரந்தரம் என்று
எதுவுமில்லை!

உன்
நினைவை தவிர!"
ரசிகன்!

"
என்னை
பார்க்காதது போல்
பாசாங்கு
செய்கிறாய்!
.
நீ
செல்ல வேண்டிய
பேருந்தை
தவறவிட்டபடி!!!"
ரசிகன்!

"
முதல்
சந்திப்பில்
இடைவெளி விட்டு
அமர்ந்திருக்கிறோம்!

என்ன
பேசுவது
என தெரியாது

இடைவெளியை
நிரப்பி விடுகிறது
மௌனம்!"
ரசிகன்!

நீ
ரசிக்கும்
சின்ன சின்ன
விஷயத்தையும்
நினைவில் வைக்கிறேன்!

அதை
மீண்டும் நினைக்கையில்
புதுப்புது
கவிதையாகி விடுகின்றன!
ரசிகன்!

என்
காதல் மொழிக்கும்
உயிரெழுத்து 12 தான்!
.
கருணை
அடிப்படையில்
.
உயிர்
கொடுத்துக்கொண்டிருப்பது
நீ
ஒருத்தி மட்டும் தான்!
ரசிகன்!

நீ
ரசித்து முடித்து
இளைப்பாறுகிற
ஒவ்வொன்றுக்கும்
நான்
முதல் ரசிகன்!

என்
கவிதைகள்
இரண்டாம் பட்சம் தான் !
ரசிகன்!

என்
மனதை மீறி
வெளிப்படும்
ஒவ்வொரு நினைவும்

எல்லை
தாண்டிய பயங்கரவாதம்!
ரசிகன்!

உன்
அழகை
அளவிட முடியாத
ஒரே
காரணத்தால் மட்டுமே

எழுத
தொடங்கிய
வரிகளோடு
முற்றும் கொடுக்கிறேன்!
ரசிகன்!

கடிதத்தின்
முதல் வரியில்
அன்புக்குரிய!

கடைசி வரியில்
அன்புடன்!

இடைப்பட்ட
வரிகளில்
உன்
நினைவுகளுடன்

-ரசிகன்
ரசிகன்!

நான்
பூக்களை தந்தால்
நீ
புன்னகை தருகிறாய்!

நான்
புன்னகை தந்தால்
நீயே
பூத்து விடுகிறாய்!
ரசிகன்!

"
என்
வழி தெரியா
பயணத்தில்
உன்
நினைவுகள்
என் வழிகாட்டி!!!
ரசிகன்!

"
நான்
பயணிக்கும்
பாதை நெடுகிலும்

சாலையோர
மரங்களில்
உன் நினைவுகள்
எனக்காய் பூத்திருக்கும்!"