ரசிகன்!


அடியே!

உண்மையில்
நீ
அழகி தான்!

அது
ஏனோ!

நான்
பொய் சொல்கையில்
மட்டும்
பேரழகி ஆகி விடுகிறாய்!
ரசிகன்!



என்
காதல் புத்தகத்தின்
முதல்
பக்கமும் நீ!
கடைசி
பக்கமும் நீ!

இடைப்பட்ட
பக்கங்கள்
தணிக்கை செய்யப்பட்டவை!!!
ரசிகன்!


மதுவை
ஒத்திருக்கும் மானுடம்!

போதையென பொழிதல்
மழையாய் தெரியலாம்!
நனைதல் விசித்திரமல்ல...
சிலருக்கு சுகமென தெரிவது
ஒரு சிலருக்கு
எரிச்சலாய் இருக்கலாம்!

குடை பிடிக்குமாம் காதல்....
ஆண் வாசனையை
உள்ளமுக்கியபடி!
யாரோ இறைத்து சென்ற சேறும்
சட்டைப்பையில் பத்திரமாய்!

நேற்று அவளென பேசியவன்
மாறுதலுக்கு உட்பட்டு
இன்று இவளென சொல்வதில்
ஆச்சரியமும் அதிர்ச்சியும்
எவருக்குமில்லை
நாளை
உன்னை சொல்லாதிருக்கும் பட்சத்தில்...

தலைக்கேறிய உச்சத்தில்
முட்டிவிடுகிறான்...
அடி என்னவோ
நட்பிற்கும் சுற்றத்திற்கும்...

எதற்கும்
கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்...
கடந்து வருகிறது
அதே மழை!

- ரசிகன்

நன்றி,
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=9746:2010-06-24-01-58-30&catid=2:poems&Itemid=265
ரசிகன்!



தேனூறும் சிறுப்பூவில்
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல

யாருமில்லா தனிமையிலும்
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது
ஒரு நினைவும் ஒரு நிழலும்!

முகம் கொடுத்து பேச இயலாது
எல்லோரும் முகம் சுழிக்க
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!

சூழ்நிலை இசையிலும்
நினைவுகளின் அலைவரிசையில்
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!

இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!

மீண்டெழும் சாத்தியக்கூறுகள்
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....

தனிமை பிடித்திருக்கிறது-
எனக்கு நானே செய்துகொண்ட
மானசீக ஒப்பந்தம்!


*
நன்றி,
வார்ப்பு!

http://www.vaarppu.com/view/2193/
ரசிகன்!


"
புரியும் புரியாது
கோபத்தின் காரணம்!
செய்வதேதும் அறியாது
கண்ணீரில் போர் தொடுக்கிறாள்!

காத்திருப்பு...
எனக்கும் காதலுக்கும்...
புரிந்திருக்குமாயின்
தலைக்கோதி தேற்றும்பட்சத்தில்
காதல் அடிமையாகிப்போயிருக்கும்!

இனி
என்னவெல்லாம் நான் கேட்க
பதிலுக்கு கேள்வி தருகிறாள்...
மௌனம் தலைகாட்ட
முத்தம் கொண்டு மீட்டுகிறாள்!


நான்
பொய் சொல்லும்போதெல்லாம்
வெட்கம் கொண்டு கேட்கிறாள்...
காதலி கர்வம் கொண்டு
காதலையே அதட்டுகிறாள்!

புரிதல்
சாத்தியப்பட்டிருக்கும்
ஒரு அசாதாரண வேளையில்

நித்தம் ஒரு யுத்தம்...
ஹார்மோன்கள் விளையாட்டு!
புரிந்தும் நழுவுகிறாள்
இனி கண்ணாமூச்சி விளையாட்டு!

-
ரசிகன்

*
நன்றி!
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006202&format=html
ரசிகன்!


அன்று
நம் காதலுக்கு
மூன்று வயது!

பரிசாய்
எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!

உரையாடிய
இதழ்கள்
உறவாட ஆரம்பித்தன!

போதும் என்றாய்!

நினைவிருக்கிறதா?

*
நன்றி!
நிலாச்சாரல்

http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
ரசிகன்!



கடற்கரை மணலில்

என்
பாதச்சுவடுகளில்
நீ
கால் பதித்தபடி வந்தாய்..

இடையில்
நீ
நின்று விட

கால்
வலிக்குதா என்றேன்...

இல்லை இல்லை...
காதலிக்கிறேன் என்றாய்..

நினைவிருக்கிறதா ?

*

நன்றி!

நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
ரசிகன்!


ஆடையிருக்க
வெட்கமெதற்கென
ஒரு வரியாய் வினவ

" ஐயோ ச்சீ போ......"
இது காதல் துவங்கும்
அவள் வாழ்த்துப்பாடல்!

இசைக்கு
பெண்மயிலின் முத்த சத்தங்கள்!

இயற்கைக்கு எதிராய்
பூக்கும் நேரம்
இவ்வேளையின் ஒத்திகைக்கு!

சட்டென மாறிடும் வெப்பம்
வியர்த்தலுக்கு பொறுப்பேற்காது...
மாறாய் ஓவியம் தீட்ட
ரேகைகள் இந்நேர இறகுகள்!

அனுமதிக்கு ஒரு வெட்கமும்
அத்துமீறலுக்கு ஒரு வெட்கமும்
அவள் செய்துகொண்ட ஒப்பந்தம்!

புறந்தள்ளும்
ஆசைகளையெல்லாம்
வெட்கங்கள் ஆக்கிரமிக்க...

இன்னும்
வரையப்படலாம்
ஓராயிரம் தீண்டல்கள்!

- ரசிகன்


-------

நன்றி..
கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9506:2010-06-11-06-03-54&catid=2:poems&Itemid=265
ரசிகன்!

தனிமை
ஒரு பொழுதேனும் உணர்ந்ததில்லை...
உணர்த்தியிருக்கிறது...
நிரம்ப அவளும் அவளையும் மட்டும்!

கதையென அரங்கேறுமிடத்தில்
கவிதைக்களம் நட்பு....
கதாப்பாத்திரம் காதல்...

கவிதையின் நாயகன்
முன்பொரு நாள்....
காதலர்கள் வயப்பட்ட சுடுமண்ணில்...
தாகம் தீர்த்ததற்காக
நண்பனென கல்லெறியப்பட்டவன்...

காயங்கள் ஒரு பொருட்டல்ல...
கண்ணீர் ஆற்றிவிடுகிறது!

நினைவுகள் ஒன்று கூடுமிடத்தில்
மயானங்களும்
கதவை மூடிக்கொள்கின்றன...
நிம்மதியாய் கண்ணீர் வற்றிவிடுகிறது!

முடிவை
முன்னின்று நடத்த
இழுத்தடித்து சாத்தப்பட்ட மனதில்......
சாத்தான்
ஒரு கோப்பையிலும்
கூத்தாடி
மறு கோப்பையிலும்
தள்ளாட்ட தாண்டவம்!

- ரசிகன்

***

நன்றி,

திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006066&format=html

***

கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9426:2010-06-07-08-13-52&catid=2:poems&Itemid=265
ரசிகன்!

முன்குறிப்பெழுதுவது
இக்கவிதை வாசிக்கும் பொருட்டு
வாசகனின் கவனத்தை ஒரு நிலைப்படுத்தல்...

இப்படியாக தொடங்கும்
கவிதை கருவில்
காதலை வசை பாடுவதாக
முன்னமே அறிவிக்கப்படுகிறது...

மூர்க்கத்தனமான முத்தமொன்றில்
மூச்சு வாங்கியபடி
அடுத்த பந்திக்கான வரிசையில்...

கூட்டம் சலசலப்பையும்
தனிமை சலனத்தையும்
இயல்பாகவே திணித்திருக்கிறது!

அடுக்கடுக்கான சத்தியங்கள்
பரிமாறப்படும் வேளையில்
எதிர்பாலின கவனம் ஈர்க்கப்படுவது
காதலை உறுதிசெய்வதாய் யூகிக்கலாம்!

இவ்வாறாக மலர்தல்
பூஞ்சோலை தோட்ட மறைவிலோ
இணைய தள மையங்களிலோ
பூப்பெய்தி விடுகின்றன!

வரைமுறைகள் தளர்த்தப்பட
அவனோ அன்றி அவளோ கூறுவதாய்

"அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்...
இப்போ போய்.. ச்சீ விடுடா"

என்பதுபோல் முடிவுபெறுகிறது
நான் வசை பாடிய காதலும்
நீங்கள் அசை போட்ட கவிதையும்!


நன்றி ,
கீற்று !
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9192:2010-06-02-12-36-35&catid=2:poems&Itemid=265
ரசிகன்!


எனதைந்தாம் சந்திப்பில்
அவள் தவற விட்டுச்சென்றது!
வெள்ளை நிறம் கொண்டது...

ஒரு ரோஜாப்பூ பூத்திருக்கும்
நாணமதை
எத்தனை முறை கசக்கினாலும்
மடிப்பாய் அமையப்பெற்றிருக்கும்!

அவள் உள்ளங்கை தாய்வீடு
வெட்கம் சிந்துமிடம் அந்தப்புரம்
கண்ணீரில் தாமரையிலை
காதல் கொண்டால் மறைபொருள்!

நேரம் காலமேதுமின்றி
வெட்கம் வந்து கதவு தட்டும்
மூடி மறைத்திட முடியாது
முடிந்து வைத்துக் கொள்வாள்!

ஆம்!

எனதைந்தாம் சந்திப்பில்
அவள் கொட்டிச் சென்ற
முதல் வெட்கத்தை கட்டியணைத்தபடி
கட்டில் துயில் காணும்
அவள் தவறவிட்ட கைக்குட்டை!

***

நன்றி!
யூத்ஃபுல் விகடன்
---