*
காத்திருப்பில்
நிலவிழந்தவளாய்
தேகம் தொட்ட
இலை மேல் கோபம் அவளுக்கு!
காம்பினை விரல் நுனியிலும்
நுனியினை இதழ் மறைவிலும்
பற்கள் இலகுவாய் மெல்ல
அவ்விதழ் உரசிய எச்சிலின்
எங்கோ ஒரு மூலையில்
எனதுயிர் நனைத்துவிடுகிறாள்!
***
நன்றி
உயிர்மை / உயிரோசை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3234

*
ஒவ்வொரு
காதலின் சட்டைப்பையிலும்
ஆயிரமாயிரம்
புண்பட்ட மௌனங்களும்
மேம்பட்ட சலனங்களும்
ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன!
அதில்
குறிப்பிடும்படியாக
குறிப்பெழுதும்படியாக
ஒன்றிரண்டு மட்டும்
அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு
பசியாற்றப்பட்டு விடுகிறது!
மீதம் எஞ்சியவை
ஒற்றை மரப்பட்டையிலும்
கோவில் உள் மதில்சுவரிலும்
கடற்கரையோர அலைபரப்பிலும்
காதலியின் பெயரென
அழகாய்
அழுத்தமாய் கிறுக்கப்படுகிறது!
***
நன்றி,
திண்ணை...
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005161&format=html***
நன்றி,
உயிர்மை
*
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2931

"
ஒரு மஞ்சள் பூசிய
மாலைவேளை சந்திப்பில்...
வெள்ளுடை விலாவாரியாய் ...
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்தவையும்!
பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடிசாய விழைந்தபடி நான்!
இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம் ,
சலித்துப்போயிருந்தன..
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்!
ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்!
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்
சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்..
பின் சற்று யோசித்தவளாய்..
சட்டென நெருங்கி,
இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்!!!
***
நன்றி
திண்ணை!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005027&format=html
நன்றி
உயிர்மை..
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2867