ரசிகன்!
*
எனக்கு
இன்னும் புரியவே இல்லை...
நீ
பூக்கடைக்கு என்ன வாங்க சென்றாய்;
கோயிலில்
யாரை கும்பிட்டு நின்றாய் என்று?!

. * .
உன் பெயர் தெரியாததால் தான்.,
பொத்தாம்பொதுவாய்
சொல்லிவிட்டு போகிறான் குடுகுடுப்புக்காரன்-
'இந்த வீட்டுக்கு
மகாலட்சுமி வர போறா' என!

. * .
தேவதைகள்
வானிலிருந்து தான் வருவார்கள் என்றில்லை...
உன்னை போல
வீட்டிலிருந்து கூட வருவதுண்டு!

. * .
சரியாய்
மாலை 5 மணிக்கு
வர சொல்லியிருந்தாள்...

கொஞ்சம்
அரை மணி நேரம்
முன்னதாகவே சென்ற என்னை
"சீக்கிரம் வர மாட்டியா?" என்று
கோபித்துக் கொண்டவளை
என்ன சொல்ல?

அவ்வளவு காதல்...
அவ்வளவும் காதல்!

. * .
எப்போதும்
தேவதையாய் தெரிகிற நீ..,
நான் மற்ற பெண்களோடு பேச மட்டும்
பேயாட்டம் ஆடி விடுகிறாய்!

. * .
இராப்பொழுதுகளில்
உன் கண்கள் மின்மினிப் பூச்சிகள்;
மற்றபடி வெட்டுக் கிளிகள்!

. * .
- ரசிகன்
. *
4 Responses
  1. அருமை! அவ்வளவு காதல்...
    அவ்வளவும் காதல்! :)


  2. Unknown Says:

    மாலை 5 மணி கவிதை அன்பின் வெளிப்பாடு... ரசிகனுக்கு நான் ரசிகன் ஆகலாமா....


  3. மாலை 5 மணி கவிதை அன்பின் வெளிப்பாடு... ரசிகனுக்கு நான் ரசிகன் ஆகலாமா.... இவண்... தமிழ்க்காதலன்...


  4. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்

    வலைச்சர தள இணைப்பு : சின்னப்பயலின் பூமாலை


Post a Comment