ரசிகன்!


ஒரு
மிச்சப்பட்டிருந்த நாற்காலி
பரஸ்பரம் பேசுகிறது!

மூன்றாண்டுக்கு பின்
பார்க்கும் முகம் என்றோ
காதல் அறிமுகப்படுத்திவிட்ட
மனசு என்றோ

ஒரு சலனமுமின்றி
புன்னகைத்து திரும்பிக்கொண்டது
அந்த நாற்காலி!

நலம் விசாரிக்கையில்
ஓலமிட்ட அவள் கைபேசிக்கு
என் அனுமதி கேட்கிறாள்....

இங்கிதம் தெரிந்தவள்..
சங்கடங்கள் விரும்புவதில்லை...

எனக்கு
பிடித்தமான கவிதையையும்
அவள் விரும்பியது இல்லை!

நாற்காலி
மீண்டும் மிச்சப்பட்டிருந்தது!

- ரசிகன்

நன்றி!
கீற்று...

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12356&Itemid=265
Labels: | edit post
Reactions: 
2 Responses

 1. excellent............

  //நலம் விசாரிக்கையில்
  ஓலமிட்ட அவள் கைபேசிக்கு
  என் அனுமதி கேட்கிறாள்....

  இங்கிதம் தெரிந்தவள்..
  சங்கடங்கள் விரும்புவதில்லை...

  எனக்கு
  பிடித்தமான கவிதையையும்
  அவள் விரும்பியது இல்லை!//

  மிக மிக அருமையான ஒரு பிரிந்த காதலின் வலி சொல்லும் கவிதை.... மிக்க நன்று...


Post a Comment