ரசிகன்!மேகங்களை
புழுங்கச் செய்து விட்டு
மஞ்சம் மிச்சப்படுகிறது!

பூ மழையென
சாரல் பூக்க...
பூத்திருந்த பட்டாம்பூச்சிகள்
நனைந்தபடி
உன்னை சுற்றி படையெடுக்கும்!

கூடவே
வானவில்லும்
இடை நெளிந்து வர
அட... சேலையில் அது நீ தான்!

பிறகென்ன...
காலங்கள் கை கட்டி நிற்க
சொர்க்கங்கள்
பக்கம் வந்து விடுகிறது!
தற்சமயம்..
என் உலகம்
அதுவாகவே மாறிவிட
உன் இருப்பு வெப்பமயமாகிறது
சூடாய்
ஒரு ஐஸ் கிரீம் போல!

என் அருகில் அமர்ந்து
ஒற்றை விரலால்
என் தொடையை நிண்டிக்கொண்டே
நீ தோள் சாய்ந்து கொள்ளும்
அத்தருணம் போதுமெனக்கு!

காதல்.... காதல் தான்!
-
ரசிகன்

*
| edit post
Reactions: 
3 Responses
  1. ரசிகன் உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html


  2. Y GAN Says:

    Grate....................Post a Comment