ரசிகன்!வெள்ளோட்டமாய்
தொடங்கிய தனிமை...

எவ்வுயிர்கள் குழுமியிருப்பினும்
நாற்சுவர்களுக்குள்
அடைபட்டிருந்த ஒரு உலகம்!

விட்டம் அதன் வானம்..
மௌனம் அதன் காற்று..
தனிமை அதன் மக்கள்!
பரபரப்புகள் அற்ற
நினைவுகள்
என் அன்பிற்குரிய
இவ்வுலகத்தின் பிரதிவாதிகள்!

வந்த எல்லோருக்கும்
ஆளுக்கொரு கோப்பையென
பகிர்ந்தளித்து விட்டேன்...

சூடு தணிவதற்குள்
பருகியாக வேண்டும்
தேநீரை!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102208&format=html
Labels: | edit post
Reactions: 
10 Responses
 1. கவிதை அருமை..
  வாழ்த்துக்கள்..


 2. நன்றி
  சௌந்தர் :-)


 3. கவிதையின் வடிவம் நல்லாயிருக்குங்க... படிக்கவும் எளிமையா இருக்குங்க....
  ஆனா கவிதையில் புரிதல் கடினமா இருக்குங்க...


 4. நன்றி
  கருணாகரன்! :-)

  நினைவுகளோடு ஒரு தேநீர் உரையாடல் - சுருக்கமாய் சொல்ல! :-)


 5. Priya Says:

  கவிதை... மிக அழகு!


 6. kavithaigalaai theriyavillai.. kaaviyangalaai irukinrathu..ovoru ezhuthum. Vaazhthukkal
  Deepikakarthikeyan.


 7. Kavithaigal alla..... kallil sethukiya suvadugal ovondrum..

  Vaazhthukkal
  Deepikakarthikeyan.


 8. நன்றி பிரியா :)


 9. @deepika:

  உணர்வுகளோடு ஒன்றி வாசிக்கும்போது தான்... அதன் சுவையே அர்த்தப்படும்... நீங்கள் அப்படி சுவைப்பவர் தான்! :)

  நன்றி... :)Post a Comment