ரசிகன்!


தலை நசுங்கிக்கிடந்தவனின்
செருப்பொன்று
சாலையை வெறித்துக்கொண்டிருக்க
ரத்தம் உறைந்த தார் ரோட்டை
தேய்த்துக்கொண்டிருக்கின்றன
மரணம் சுற்றும் சக்கரங்கள்!

மாண்டவனின் கடைசி நிமிட
முனகல்களை
பதிவு செய்ய தவறிவிட்டன
வண்டிகளின் ஹாரன் சத்தமும்
ஆம்புலன்ஸின் சைரன் சத்தமும்!

நிராசைகளாய் போய்விட்ட
வாழ்க்கையின் இறுதிப்படிவம்
சொந்தக்காரனின் கையெழுத்துக்காய்
பிணவறையின் வரவேற்பறையில்...

மீண்டும் பருகத்துடிக்கும்
மரணத்தின்
சாலையை ஒட்டிய மரத்தடியில்
அவன் கனவுகள்
அனாதையாய் விசும்பும் சத்தம்
என்னை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது!

கவனமாய் செல்லுங்கள்!

-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311032012&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button*
Labels: | edit post
Reactions: 
6 Responses
 1. Thenu Says:

  வித்தியாசமான ஒரு எச்சரிக்கை விடுப்பு.. ஆழமான வரிகளோடு.. ரொம்பவே வித்தியாசமான களம் ரசிகனிடம் இருந்து எங்களுக்கு.. :) :)
  அருமையா இருக்கு ரசிகன்..


 2. எளிமையான தமிழில் அருமையாக கவிதை.. 3. @தேனு :

  :) என்னையே ரசிக்க வைக்கறீங்க :)


 4. @வேடந்தாங்கல் - கருன்:

  நன்றி சார் :)


 5. @சமுத்ரா :

  நன்றி :):):)


Post a Comment