ரசிகன்!
ரசிகனின் iPhone செயலி அறிமுகம்!

To download this from App store , click here!

Submit button

வணக்கம்!

சட்டென தொட்டு விட்டேன் நூறாவது பதிவை.... இன்னும் சரியாய் சொல்லப்போனால் ரசிகன் பிறந்து 6 வருடமாகிறது!

எழுதி முடித்தாகி விட்டது 99 கவிதைகளை ....
கவிதைகள் என்பதை விட... என் ஆசை, கோவம், சந்தோஷம், சோகம், தனிமை, காதல், நட்பு முதலான கலவைகளின் தமிழ் மொழி ஊட்டிவிட்ட ஒரு வாய் சோறு!

எனது மிக சராசரியான வாழ்வில் ஏற்பட்ட ஒரு தற்காலிகமான வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு ஊடகம் தான் இந்த ரசிகன் பக்கங்கள்!

சில நாட்களாகவே ஒரு தொகுப்பினை வெளியிட வேண்டுமென்ற ஒரு ஆவல் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது.... ஆனால்... இன்னும் என் படைப்புகளின் மீது ஒரு முழு மன திருப்தி எற்படாமலிருக்கிறது! இன்னும் நிறைய எழுத வேண்டும், கற்க வேண்டும், வாசிக்க வேண்டும், அனுபவப்பட வேண்டும் என்கிற எண்ணம் நிறைவேறும் பட்சத்தில் அதற்கான முயற்சியில் இறங்கி விடலாம்!
இருப்பினும்... வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டினை சாதகமாக்கி...
ரசிகன் 'RASIGAN' எனும் செயலி(Application) உருவாக்கப்பட்டு எனது கவிதைகளை உலகளவில் உலவ விட்டிருக்கிறேன்!

iPhone / iPad பயன்படுத்துபவர்கள் இந்த முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்! இச்செயலி மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்!

நன்றிகள்...இந்த பக்கங்களை நிரப்ப... என் பேனாவை விட அப்பேனாவுக்கு மை ஊற்றியவர்களுக்கு தான் என் நன்றிகளை குவித்து வைத்திருக்கிறேன்!
*திரு. இளங்கோ (கவிதைக்காரன் டைரி)
*திரு. கலாசுரன்
*திரு. ஆறுமுகம் முருகேசன்

இவர்களன்றி இன்று ரசிகன் உருவாகி இருக்க முடியாது! எனது படைப்புகளை தொடர்ந்து வாசித்து, விமர்சனமளித்து, ஊக்கமளித்து வரும் என் தோழர்/தோழிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்...
குறிப்பிடும்படியாக திருமதி. ஷம்மி முத்துவேல், கவிதா ரவீந்தர்!

கடைசியாக...
எனது படைப்புகளுக்கு அங்கீகாரம் கொடுத்து வரும்
கீற்று , திண்ணை , விகடன் , வார்ப்பு , உயிர்மை , அதீதம்
இணைய இதழ்களுக்கு என் நன்றிகளும், வாழ்த்துகளும்!

-ரசிகன்
Labels: , | edit post
Reactions: 
14 Responses
 1. முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...


 2. வாழ்த்துக்கள் சார்


 3. Elango Says:

  தொடர்க நின் பயணம்..!
  வாழ்த்துக்கள்...துரை..!
  :)


 4. நூறாவது உங்கள் படைப்பு உங்கள் தீவிர முயற்சியின் பலன்...!

  இன்னும் மேலோங்கி வளர என் வாழ்த்துக்கள்..!!!

  மிகவும் சந்தோஷமாக உள்ளது சதீஷ் ஏனென்றால் எனக்கு முழுக்க முழுக்க தமிழ்க் கவிதைகளைப் பற்றி கற்றுக்கொடுத்தது கவிதைக்காரன் என்ற இளங்கோ என்பவர் தான். என்னை தமிழ் கவிதை உலகில் இந்த நிலைமைக்கு ஆளாக்கியதில் அவர் பங்கு மிக மிக பெரியது. ஆறுமுகம் முருகேசன் எனது இனிய இலக்கியத் தோழர்.. இவர்கள் இருவரின் புகைப்படங்களோடு நானும் உங்களால் இணைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி..!!

  இலக்கியத் தோழமையுடன்

  கலாசுரன்..


 5. congrats , best wishes for the prolonged journey of writings .... 6. @ சி.பி.செந்தில்குமார்

  நன்றி சார்!
  நிச்சயமாக ஒரு வித பரவசத்தோடு தான் இருக்கிறேன்! :)
  வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்!


 7. @Elango na :

  ஒரு முதன்மையான வடிவம் கொடுத்ததே நீங்க தான் னா... :):):)


 8. @கலாசுரன்

  எல்லாருக்குமே ஒரு முறையான பக்குவமான வழிகாட்டுதல் தேவைப்படும்.. என்னோட படைப்புக்கு உங்க மூலமா கிடைச்சது தான் சந்தோஷம்....

  தொடர்ந்து உங்களோட வழிகாட்டுதலோட தொடர்வேன்....

  :)


 9. @shammi...

  its always been a worthy conversation and motivation with you.. thank u very much :)


 10. @ ஜாஃபர் ஷாதிக்.சி

  நன்றி தோழர்!


 11. Anonymous Says:

  eppudi iphone app eluthurathu nu oru thodar pathivu poteenganna, punniyama pogum..!


 12. எழுதுவது ஒரு பெரிய விஷயமல்ல! அதை செயல்படுத்துவதில் தான் கொஞ்சம் சிரமம்! காப்புரிமை சம்பந்தப்பட்டதும் கூட!

  நன்றி!:)


 13. Elango Says:

  *

  மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது துரை..!

  காரணம்..

  பிரியங்கள் நிறைந்த ஒரு கூட்டணி.. ( கலாசுரன் / ஆறுமுகம் முருகேசன் / ஷம்மி முத்துவேல் மற்றும் நீ )

  படைப்பின் மீது அதன் தொடர் வேட்கையின் நீட்சியாக நீண்டு கவியும் நிழல், உனக்கு கற்றுக் கொடுப்பது வெயிலின் வெம்மையை என்பதால் தான்...

  உன் சமீபத்திய பல கவிதைகளுக்கு குடை தேவைப்படவில்லை..

  கவிதைக்குள் ஆரோக்கியம் என்பது என்ன..?

  அர்த்தங்களோடு மல்லுக்கட்டி இரவுகளில் காகிதங்களோடு புரள்வது அல்ல..

  வெளிப்புலனில் இருந்து சட்டென்று நம் காட்சியாக கடந்து போகும் ஒரு தருணத்தை அப்படியே மனதுக்குள் கையகப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே போதுமானது.

  அது இட்டு போகும் காட்டுப் பாதையில் பூத்துக் கிடக்குமே கோடி மலர்கள்..!

  ஒவ்வொன்றும் ஒரு நிறம், ஒவ்வொன்றும் ஒரு மணம்..

  பறிக்கும் நம் விரல்கள் பேனாவாக இருக்கும் பட்சத்தில்...
  கோடி கவிதைகள் கண் முன்னே..

  மெத்த மகிழ்ச்சி...தம்பி..!

  ( கலாசுரன் மற்றும் தம்பி ஆறுமுகம் முருகேசன் இருவருக்கும்...
  உன் சார்பில் நன்றியை உன்னோடு நின்று நானும் தெரிவித்துக் கொள்கிறேன் )

  :)

  ஷம்மி முத்துவேல் என்னும் இனியத் தோழியின் நட்பும் அதன் வழி நீங்கள் இருவரும் கவிதைகள் சார்ந்து முன்னெடுத்து சென்ற உரையாடல்களும்..

  உங்கள் இருவரின் படைப்பு போக்கை..மேலும் பல பாதைகளுக்கு முன்னகர்த்தும் என்று நம்புகிறேன்..

  மீண்டுமொரு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!

  *****


Post a Comment