ரசிகன்!


"

ஒரு மஞ்சள் பூசிய
மாலைவேளை சந்திப்பில்...

வெள்ளுடை விலாவாரியாய் ...
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்தவையும்!

பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடிசாய விழைந்தபடி நான்!

இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம் ,

சலித்துப்போயிருந்தன..
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்!


ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்!
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்
சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்..

பின் சற்று யோசித்தவளாய்..

சட்டென நெருங்கி,
இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்!!!

***

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005027&format=html
நன்றி
உயிர்மை..
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2867
12 Responses

 1. Priya Says:

  //பக்கவாட்டில்
  பசிக்கடங்கிய மழலையாய்
  மடிசாய விழைந்தபடி நான்!//.....சோ க்யூட்!

  மீண்டும் ஒரு அழகான காதல் கவிதை!


 2. @padma ::

  Thank you :)

  @priya :

  நன்றி நன்றி :)


 3. Aarthy Says:

  --kadhal kadhal.. romba arumaya iruku durai :)..sila pala samyangalla unga kadhal kavithaigal padichituu nammayum ithai pola kavithai eluthi oruvar virumbuvannu oru vitha ekakatha edrpaduthudireenga..

  antha ekkathulendu meela enaku romba neram aguthu... meendu pinbu ithu oru kavithai appdinnu mattum nenainnu enaku naney solikira nilamai urvagiduthu...

  ipollam eluthanungratha vida.. neraya padikanumngra aasi than.. athanalayum kavithaigal kittendu vilagi vilagii sella sella than avai ennai thurathi thurathi ekkalithu sirikindrana...
  "எஞ்சிய மின்னல் விழுதுகள்! " ---- intha vizhuthugal enakul oaru aalamarathai uruvakki kondirukindrna :) arumai 4. சட்டென நெருங்கி,
  இடைக்கும் இடது கைக்குமான
  தன் இடைவெளியை
  என் வலது கைகொண்டு
  இறுக்க அணைத்து நிரப்பியபடி
  மீண்டும் நடைபயில்கிறாள்!!!///

  யாற் அந்த காதல் தேவதை சதீஷ்?


 5. @ஆர்த்தி:

  இது என் கவிதைக்கு கிடைத்த அங்கீகாரம் போன்றுள்ளது!!!

  நன்றிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!

  @Sivaji sankar:

  thank u very much friend! :)


 6. @subivanya:

  shhhhhhhhhhhhhh :P


 7. muthamizh Says:

  wowwwwwwwwww......superbbbbbbb.....machan...

  பக்கவாட்டில்
  பசிக்கடங்கிய மழலையாய்
  மடிசாய விழைந்தபடி நான்!
  arumai...arumai.......
  thodakkam....mudivu.....superrrrrrrbbbbbbbb


 8. Nanri muththamizh :):):)


 9. gokila Says:

  irukki anaithu nadai payila payila....
  irukkam thalarnadhadhu.. manadhinil...Post a Comment