ரசிகன்!தெருமுனை காத்திருப்பில்
தினம் தினம்
உன் வருகைக்காய் நான் !

தோழிகளும்
புத்தகமுமாய்
கை வீசி
கலகலப்பாய்
பேசி வருவாய் நீ...

அன்றொரு
மிகைப்படியான மாலை பொழுதில்

எனை
கடக்கையில் மட்டும்

பார்வைகளை
கட்டாயப்படுத்தி திசை திருப்பி

புத்தகத்தை
மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டாய்...

புது
காதல் உணர்வோடு நீ!

உன் உணர்வறியா
குற்ற உணர்வோடு நான்!

-
ரசிகன்!
| edit post
Reactions: 
4 Responses
 1. Priya Says:

  //புத்தகத்தை
  மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டாய்...

  புது
  காதல் உணர்வோடு நீ!//.....மிகவும் ரசனையான வரிகள். காதல் சொட்டுகிறது!!! 2. தென்றலாய் வருடுகிறது கவிதை!


 3. தென்றலாய் வருடுகிறது கவிதை!


Post a Comment