ரசிகன்!


காதல் சபிக்கப்பட்ட
ஒரு பேனா முள்ளில்
பெண்மை உமிழும் அகராதி
காதலி!

இக்கவிதை...
நமக்கானதாய் புனரமைக்கப்பட்ட பூமி!
வெண்ணிற நிலவும்
செந்நிற ஆப்பிள்களும்
தடை செய்யப்பட்ட
இந்நட்சத்திர தோட்டத்தில்

நீயென நான்
நானென நீ
கவிதையென எழுதி முடிக்க
காதலென கொஞ்ச வார்த்தைகள்!

தூறல் விழும்
சிறு மழை காட்டில்
ஊடல் அவ்வப்பொழுது நனைந்துவிட்டுப்போகும்!

பெண்மை பேசும்
புது வெட்கம் போல
சலனம் எப்போதாவாது பொய் பேசிப்போகும்!

அவள் அன்றி அவளாடை
தீண்டி விடும்
காற்றோ, புல்லோ , பூக்களோ
எந்நேரமும் ரீங்காரமிடும் காதலிசையென!

பகலுக்கு இரவின் மீதிருக்கும்
தீராத ஆசையையும்

இரவுக்கு பகலின் மீதிருக்கும்
தீராத பகையையும்

எழுதி முடிக்க வார்த்தைகளற்று
களைப்புற்று இளைப்பாற

கண் விழித்து பார்க்கையில்
காதலி மடியில் துயில் கொண்டது
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

- ரசிகன்

*

நன்றி!
கீற்று..

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9876:2010-07-07-04-38-45&catid=2:poems&Itemid=265

*
Labels: | edit post
Reactions: 
10 Responses
 1. மிக அற்புதமான கவிதை.. பாராட்டுக்கள்


 2. ரசித்தேன். மிக நளினமான கவிதை.


 3. Thank u very much senthil...

  thanks for ur comments... :)


 4. thank u mam...

  its motivating me to give the best..

  thank u very very very much mam :)


 5. Lenin P Says:

  நல்ல கவிதை. நுட்பமாக விசயத்தை சொல்லி இருப்பது இதம். நல்லது.


 6. Thank u very much Lenin :)


 7. வாழ்த்துக்கள் ரசிகா :)


 8. நல்லா இருக்கு நண்பா :)


 9. nanri sivaji ! :)


  &

  thanks thala :)


 10. Jayaseelan Says:

  simply superb rasigan....


Post a Comment