ரசிகன்!



ஒரு பார்வையின் கவனத்தை
திசை திருப்புதலை விட
வேறொன்றும் பெரியதாய் இல்லை....
அவளை சொல்ல!

ஒரு குழந்தையின்
புன்சிரிப்பை காட்டிலும்
அழகாய் பூத்திருந்ததுஅவள் புன்னகை..

பெண்ணினத்தின்
மெல்லிய பொறாமையை விட
சிவப்பு பட்டிருக்கும்
அவள் இதழ்களின் வண்ணப்பூச்சு...

எப்போதேனும் சீறிப்பாயும்
வால் நட்சத்திரத்தை விட
கொஞ்சம்
நிதானமாய் அவசரப்படும்
அவள் காதோர மயிறிழைகள்!

எஞ்சியவை
வெட்கம் கொள்ள...
எனக்கும் கொஞ்சம் வெட்கம் தான்
அவைகளை எடுத்துச் சொல்ல...

ஹ்ம்ம்....
இவளை நிலா என்றோ
பட்டாம்பூச்சி என்றோ
அன்னியப்படுத்துதலை விட

என் காதலுக்கினிய
காதலி என
அறிமுகப்படுத்துதல் சிறப்பு!

வேறொன்றும் பெரிதாய் இல்லை
அவளை சொல்ல..
வெறும் அழகி எனலாம்...
போதுமானது!

-ரசிகன்



நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310111421&format=html


*
8 Responses
  1. Priya Says:

    அழகிக்கு எனது வாழ்த்துக்கள்...
    அழகாக எழுதிய உங்களுக்கும்!!!


  2. நன்றி பிரியா!!!

    அந்த அழகியின் சார்பாகவும்..
    இந்த ரசிகனின் சார்பாகவும்... :)


  3. //என் காதலுக்கினிய
    காதலி என
    அறிமுகப்படுத்துதல் சிறப்பு!//

    இந்த வரிகளின் கருத்து மிக அருமை.

    அழகிக்கவிதை, அழகுக்கவிதை.... ரசிகன் எப்போதுமே நீங்கள் ரசிகனாக உணர்வதால்தான், சிறந்த கவிஞராகவும் இருக்கிறீர்கள்...

    "வேறொன்றும் பெரிதாய் இல்லை
    உங்களை சொல்ல..
    வெறும் கவிஞர் எனலாம்...
    போதுமானது!.............."


  4. நல்லக் கவிதை


  5. கவிநா!

    மிகைப்படியான பின்னூட்டம் :):):)
    நன்றி நன்றி நன்றி :)


  6. @ஜெயா

    நன்றி தோழர்!


  7. //அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.. //
    பாடல் நினைவுக்கு வந்தது உங்கள் கவிதையைப் படித்தவுடன்..
    வாழ்த்துக்கள் :)


  8. நன்றி நாணல் :-)


Post a Comment