யுத்த களத்தின்
புழுதியில் நசுக்கப்படுகிறது
என் இரவுகள்!
சுட்டெரிக்கும் நிலவில்
பரிமாறப்படும் நிழலில்
நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!
மந்திரக்காரியாகவே
தந்திரங்களை முன் வைக்கிறாய்!
சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
நிர்வாணமாகிறது எனதறை!
நிபந்தனையோடு
கரையத் தொடங்குகிறாய்...
வெற்றியில் பாதியும்
தோல்வியில் பாதியும் எனக்கு!
அச்சத்தின் வாடையோடு
களமிறக்கப்படுகிறது
கூர் தீட்டப்பட்ட வாளோடு புரவி!
- ரசிகன்
நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311043018&format=html
ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*
////சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!////
நான் சுவாரசியமாக படிக்கிறேன்... அழகான வரிகளனைத்தையும்...
ரசிகனின் ரசிகையாக .. அருமை சதீஷ்..
வார்த்தைகோர்வைகள்....அருமை சதீஷ்...
நன்றி சௌமியா :) :) :)
நன்றி திரு.செந்தில்குமார்