
என்னை
கடந்து செல்லும்
பெண்ணவள் தோழிக்கூட்டமும்
தேரோட்டம் தான்!
யாரிந்த பெண்ணோ
கதை பேசி நடக்கின்றாள்...
என்னுடலில் கை தீண்டாமல்
உயிர் கொன்று போகின்றாள்...
முட்டும் சாலை வளைவில்
முகம் திருப்பி
என்னுயிர் தூக்கி எறிகின்றாள்!
அப்பக்கம் வந்த
பட்டாம்பூச்சி
எனை பார்த்து கேட்கிறது...
அலட்டிக்கொள்ளாத
ஒரு அழகு..
மடிப்பு கலையாத கைக்குட்டை
சிவப்பு சாயம் பூசிய சிரிப்பு...
யார் அந்த தேவதை???
- ரசிகன்
நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311051517&format=html
ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*
நல்லா இருக்கு கவிதை பாராட்டுக்கள்
super rasigan
பாராட்டுக்கு நன்றி தமிழ்த்தோட்டம்! :)
நன்றி காயத்ரி!