ரசிகன்!


என் கரத்தை
இறுக்கப் பிணைத்து
உரக்கச் சொல்லியிருக்கிறாய்
நான் நீ என்றும்
நீ நானென்றும்!

பேசி தீர்க்க வேண்டிய
சில மனஸ்தாபங்களையும்
சொல்லி புரிய வைக்க வேண்டிய
சில உணர்வுகளையும்
ஒரு காதல்
மற்றுமொரு அகங்காரம்
ஒடுக்கி வைத்திருப்பதென்னவோ
அப்பட்டமான நிஜம்!

இணைய உரையாடல்களில்
நீ ஒளிய வேண்டியதில்லை...
தொலைப்பேசி அழைப்புகளை
நீ துண்டிக்க வேண்டியதில்லை...
சமூக வலையமைப்புகளில்
எனை நீக்க வேண்டியதில்லை!

நான் ஆணென்ற
ஒரு செருக்கும் உண்டெனக்கு!

நீ
தாழிடாமலே தூங்கலாம்...
இனியும் தட்டுவதாயில்லை
புறக்கணிப்பின் கதவுகளை...!


- ரசிகன்

நன்றி,
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14767:2011-05-22-17-50-11&catid=2:poems&Itemid=265



*
4 Responses
  1. CoPRA Says:

    Woow... After a long time back I am viewing Ur blog. Super... the first one itself



  2. Anonymous Says:

    ஊடலில் வெளிவரும் தாபம்-அது
    உப்பள வாகட்டும கோபம்
    தேடியே வந்திடும் சுகம்-மேலும்
    தேனாய் இனிக்கும் அகம்

    புலவர் சா இராமாநுசம்


  3. நன்றி
    புலவர் சா இராமாநுசம் :)


Post a Comment