
ஒரு குறிப்பிட்ட
சில தோழிகளை மட்டும்
எண்ணம் பட செய்கிறது
ஒரு 555 சிகரெட்டும்
ஒரு கிளாஸ் ஜானி வாக்கரும்!
பேசப்படாத நாட்களில்
மௌனங்களுக்கு
ஊற்றி விடவோ
பற்ற வைக்கவோ
தவறியதில்லை நினைவுகள்!
.
அதிகப்படியான அன்பென்பதும்
தூக்கலான நட்பென்பதும்
ஒரு சிட்டிகை காதலில்
சமன் செய்யப்படுதல்
குறித்த விவரம்
கேட்டே தீர வேண்டும்
அத்தோழிகளிடம்!
எவள் எவள்
எந்தெந்த ஊரில்
எந்தெந்த நாட்டில்
பழைய தோழிகளாக,
புதிய காதலிகளாக,
மனைவிகளாக என்ற தகவலில்...
கையை சுட்டுவிட்டது
சிகரெட் துண்டு!
- ரசிகன்
நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310122718&format=html
*

ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை
உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!
கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
அலட்டிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!
மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
சலனப்படும்
சில புன்னகை மழைகள்...
ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களையோ
கவர்ந்து விட எத்தனிக்க
முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!
- ரசிகன்
நன்றி
கீற்று
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11930:2010-12-14-20-17-40&catid=2:poems&Itemid=265 *

ஒரு பெண்ணின்
மிக குறுகிய சிரிப்பழகில்
விரிந்திருக்கும் ரகசியங்கள்...
ஈர்த்தல்
அல்லது பொய்த்தல்
அவரவர் சௌகரியத்திற்கு!
ஒரு கிளாஸ் பழரசத்தில்
ஈருயிர் உறிஞ்சுதல்
அடுத்தவன் பார்வையின் பொழுதுபோக்கு...
இதை காதலென
குழம்பி விடுதலும்
குழப்பி விடுதலும்
அடுத்தவன் காதலியையோ
அடுத்தவள் காதலனையோ
தரம் மாற்றும் கூடுதல் சிறப்பு...
பெண்மையின்
இயற்கை சீற்றங்களில்
பாகுபாடு இருப்பதில்லை எவருக்கும்...
குறிப்பிடும்படியாக எனக்கும்!
மேற்கூறியபடி
மேஜையில் சிந்திய
சில உண்மைகளும்
கிளாசில் கசிந்த
பல உளறல்களும்...
ஏனோ அடுத்த வோட்கா பாட்டிலில்
அதிக விருப்பத்தை
ஏற்படுத்தி விடுகின்றன..."
- ரசிகன்
நன்றி
திண்ணை
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012196&format=html*
பனி தழுவிய
முன்வாசலில்
மழைகளை எதிர்பார்த்து
வழிகின்றன வண்ணத்துப்பூச்சிகள்...
முன்னிரவிலே முடிவாகியிருந்த
இன்றொரு நாள் சந்திப்பில்
ரேகைகளை
வாசற்கதவுகளில் செலுத்தி
மெதுவாய் கனியும் பாதங்களில்
உயிர் துடிப்பு
ஏற்றம் இறக்கம் கண்டதும்,
வரவேற்பினை மறந்து
வசீகரித்து கொண்ட
பார்வைகள் பேசிய அடுக்கு மொழிகளும்
கவிதைகள் தான் காமத்துக்கு!
பின்வாசலை
நுகர்ந்த செடிகளின்
ஒற்றை ரோஜா பூத்துவிட்டதாய்
பெருமிதப்பட்டவள் பறித்தே விட்டாள்!
நீட்டிய ரோஜாவை
என் விரல்கள் பற்ற
திரும்பிக்கொண்டாள்
கூந்தலை முன்னிலைபடுத்தி...
ஆக,
மழை பெய்ய தொடங்கியிருந்தது
என் வீட்டுக்குள்!
நன்றி
திண்ணை
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310121216&format=html
*