ரசிகன்!ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை
உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!

கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
அலட்டிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!

மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
சலனப்படும்
சில புன்னகை மழைகள்...

ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களையோ
கவர்ந்து விட எத்தனிக்க

முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!

- ரசிகன்

நன்றி
கீற்று
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11930:2010-12-14-20-17-40&catid=2:poems&Itemid=265*
Labels: | edit post
Reactions: 
4 Responses
  1. இன்றைய நவினத்துவதுடன் வார்த்தைகளை பிணைத்திருப்பது சிறப்பு


  2. நன்றி சங்கர் :-)


  3. அருமையா சொல்லி இருக்கீங்க ... வாழ்த்துக்கள்Post a Comment