ஒரு
அர்த்தமற்ற இரவில்
நிலா கவிதை தோன்றும் எனக்கு...
காதலி
கை நிறைய அள்ளிக்கொடுத்த நிலாக்களை
ஒவ்வொன்றாய் பிரித்து படிக்கும்
பட்டாம்பூச்சி இரவு...
ஒரு நிலாவில்
குழந்தை முத்தமிடும்...
பதிலுக்கு பதில் முத்தம் தருவாள்!
ஒரு நிலாவில்
மழை பெய்யும்..
தாவணி குடையில்
கதை பேசி வருவாள்...
ஒரு நிலாவில்
பூக்கள் கூட்டம் போடும்...
இவள் தலைமை தாங்கியிருப்பாள்!
இடையில்
தேநீர் முடித்த பட்டாம்பூச்சிகளிடம்
தெளிவாய் சொல்லிவிடுகிறேன்...
பெரும்பாலான இரவுகளில்
நிலாக்கள்
நிலாக்களாய் இருப்பதில்லை-
அவள் தூங்குகிறாள்!
-
-ரசிகன்
நன்றி ,
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310120511&format=html
*
Post a Comment