ரசிகன்!


பனி தழுவிய
முன்வாசலில்
மழைகளை எதிர்பார்த்து
வழிகின்றன வண்ணத்துப்பூச்சிகள்...

முன்னிரவிலே முடிவாகியிருந்த
இன்றொரு நாள் சந்திப்பில்

ரேகைகளை
வாசற்கதவுகளில் செலுத்தி
மெதுவாய் கனியும் பாதங்களில்
உயிர் துடிப்பு
ஏற்றம் இறக்கம் கண்டதும்,

வரவேற்பினை மறந்து
வசீகரித்து கொண்ட
பார்வைகள் பேசிய அடுக்கு மொழிகளும்

கவிதைகள் தான் காமத்துக்கு!

பின்வாசலை
நுகர்ந்த செடிகளின்
ஒற்றை ரோஜா பூத்துவிட்டதாய்
பெருமிதப்பட்டவள் பறித்தே விட்டாள்!

நீட்டிய ரோஜாவை
என் விரல்கள் பற்ற
திரும்பிக்கொண்டாள்
கூந்தலை முன்னிலைபடுத்தி...

ஆக,
மழை பெய்ய தொடங்கியிருந்தது
என் வீட்டுக்குள்!


நன்றி
திண்ணை

*

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310121216&format=html


*
Labels: | edit post
Reactions: 
0 Responses

Post a Comment