ரசிகன்!

"
பயணத்தின்
பெயர் மற்றும் முகவரி
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!

மெல்லினம் அவளெனவும்..
வல்லினம் நானெனவும்,
முரண்பாடுகள் ஒன்றுவது போல்
சித்தரிக்கப்படுகிறது பயண வழி !

தோள் சாய்தல் பகிர்வதாகவும்
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!

இந்நெறிமுறைகளுக்குட்பட்டு
பாதைகள் தீர்மானப்பட..

நடுவானத்தில்,

பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள்

முடியாது நீளும்
என் பயணத்தில்
இன்று நட்பிற்குப் பதில்
தனிமை விரல்கள்!

-ரசிகன்!

***
நன்றி,
கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8460:2010-05-11-13-01-53&catid=2:poems&Itemid=265
Labels: | edit post
Reactions: 
5 Responses
 1. ஹேமா Says:

  //தோள் சாய்தல் பகிர்வதாகவும்
  கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
  மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்
  வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!//

  ஆழமாய் உணர்ந்த வரிகள்.வார்த்தைகள்.
  ரசித்தேன். 2. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com


  You can add the vote button on your blog:

  http://www.thalaivan.com/button.html

  THANKS


 3. Priya Says:

  //மெல்லினம் அவளெனவும்..
  வல்லினம் நானெனவும், //....mmm nice!

  //தோள் சாய்தல் பகிர்வதாகவும்
  கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
  மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும் //...அழகான வரிகள்!
  வாழ்த்துக்கள் துரை!Post a Comment