"
பிஞ்சு விரல்களின் பிடியில்
சிலேட்டு பரப்பில்
கரையத்தொடங்கும் பல்பம்!
அம்ம்ம்ம்ம்மா......
என உச்சரித்தவாறு
வட்டங்களை வரையும்
பல்ப முனைகள்!
முதலிரண்டு கண்ணாம்,
கீழ்
கொஞ்சம் நெளிந்தவாறு மூக்காம்,
அடுத்து
இரு கோணல் கோடிட்டு வாயாம்!
இது பொட்ட்ட்டு.....
என்றழுத்தியதில்
உடைபட்டுப்போனது
பல்பம் இரண்டாய்!
உயிரொன்று குறைகிறதென்று
பால்யத்தின் உச்சத்தில்
சிலேட்டில்
பதிக்கிறதொரு ஈர முத்தம்-
பல்ப துகள்களை
ருசிக்க தொடங்கியவாறு!
-ரசிகன்
நன்றி!!!
யூத்புல் விகடன்!
***
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem070510.asp
நல்லாயிருக்கு
நன்றி பத்மா :)
good,(. .)
U
நன்றி சரவணன்! :)
கவிதைக்கேற்ற தலைப்பு... நல்லா இருக்கு!
thank u priya :)
//உயிரொன்று குறைகிறதென்று
பால்யத்தின் உச்சத்தில்
சிலேட்டில்
பதிக்கிறதொரு ஈர முத்தம்-
பல்ப துகள்களை
ருசிக்க தொடங்கியவாறு!//
உருக வைக்கிறது வரிகள்
நல்ல கவிதை
நம்ம பக்கமும் வாங்க நண்பரே..
nanri :)
kandippaa varan :)
உயிரொன்று குறைகிறதென்று
பால்யத்தின் உச்சத்தில்
சிலேட்டில்
பதிக்கிறதொரு ஈர முத்தம்-
பல்ப துகள்களை
ருசிக்க தொடங்கியவாறு!//
சிலேட்டு முத்தம் அழகான பதிவு..