ரசிகன்!
எனக்கென்ன அவசியப்படுகிறதென

யோசித்ததைக்காட்டிலும்

பெருமளவு நேரங்கள்

அவள் யோசனையிலேயே மரணித்து விட்டன!


என்னை

அவளுக்கு பிடிப்பதை காட்டிலும்

அவளுக்கென்ன பிடிக்கும்,

பிடித்திருக்கிறதென பட்டியலிட்டதில்

இன்னொரு தவணை வாழ்ந்திருக்கலாம் போல!


அடங்கா பசியென

வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே இருக்கிறேன்!


மௌனம்

அவளுக்கு புரிவதாக இல்லை...

அவளினத்து மலர்களும் அரியணை ஏறுவதாயில்லை...

கவிதைகள் காகிதத்தின் படி தாண்டுவதில்லை...


நிறைவு பெறாத விழாவின்

நன்றியுரை மட்டும் எனக்கு!


இனி என் விருப்பங்கள்

கனவுகளினேனும் திணிக்கப்படட்டும்...


பிரசுவிக்கப்படாத காதல்

காத்திருப்பில் நிற்க


அவளை பார்த்த பார்வையிலேயே

நின்று கொண்டிருக்கிறேன்...


இன்றோடு

எண்ணி 675 -ஆம் நாள்!- ரசிகன்

**************

நன்றி
திண்ணை
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310100213&format=html
*
Labels: | edit post
Reactions: 
0 Responses

Post a Comment