ரசிகன்!


உங்கள்
எவரையும் போல் நானில்லை!
ஒரு நட்பு மட்டுமல்ல...
ஒரு காதலையும் தொலைத்தவன்..
என்னையும் தான்!

என்னைப்போல
நீங்களும்
ஏதேனும் ஒரு நினைவோடு/ தோல்வியோடு
புழுங்கிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்...
என்ன ஒன்று...
அதை வாசிக்கவோ / ரசிக்கவோ
உங்களிடம் நீங்கள் இல்லை!

இப்படியான நினைவுகளை விட
ஒரு கொடூர விலங்கொன்று இருக்குமாயின்
நிச்சயம்
அது நானாகத்தான் இருக்கக்கூடும்-
என் ஆசைகளை கொன்று திண்கிறேன்!

நிழலை
விழுங்க முயற்சிக்கும் என் இரவில்
பேய் என படரும்
அவள் நினைவுகள்
இம்மனித பிசாசை
தூங்க விடப்போவதில்லை...

அவளின்
தீரா தாக நினைவுகள் பட்டு
தெறிக்கிறது என் மௌனம்...
ஒன்று கவிதையாகி விட்டது!
மற்றவை அனாதையாகி விட்டது!

-ரசிகன்

நன்றி,
வார்ப்பு!
*
http://vaarppu.com/view/2285/


*
Labels: | edit post
Reactions: 
7 Responses
 1. நல்லாருக்கு ரசித்து படித்தேன்..


 2. muthamizh Says:

  இந்த கவிதையை எத்தன முறை திருப்பி திருப்பி படிச்சேன்னு எனக்கே தெரியல .....ஆழமான வலிய அழக சொல்லி இருக்க , நிச்சயம் இது என் நினைவில் நிற்கும் கவிதை ....


 3. ரசிகனின் ஒவ்வொரு வரிகளும் ரசிக்கவைக்கின்றன....
  படித்ததும் பட்டென்று ஒட்டிக்கொண்டது, எங்கோ எப்போதோ தொலைத்துவிட்ட நினைவுகளும், தோல்விகளின் தடயங்களும்... அருமை...


 4. @ ஆர்.கே.சதீஷ்குமார் :

  ரொம்ப நன்றி சார் !


 5. muthamizh:

  இப்படியான பின்னூட்டங்கள் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத அழுத்திக்கொண்டே இருக்கின்றன... அதிகப்படியான நன்றிகள் உங்களுக்கு!


 6. கவிநா... :

  ஆம்... தொலைத்து விட்ட நினைவுகள் எங்கேனும்.. எப்போதும் எவ்வாறாவது வந்து நம்மை தீண்டி விட்டுப்போகும்!...

  ரசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் தோழி!


 7. mages Says:

  "அவளின்
  தீரா தாக நினைவுகள் பட்டு
  தெறிக்கிறது என் மௌனம்...
  ஒன்று கவிதையாகி விட்டது!
  மற்றவை அனாதையாகி விட்டது!"

  இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன..என்னையும்..சில நொடிகளுக்கு...சில நினைவுகள் கடந்து போயின...நன்றி...


Post a Comment