ஜன்னலோர பேருந்தின்
பயணத் தருவாயில்...
கடந்து செல்லும்
ரோஸ் கலர் சட்டை
பள்ளிக் குழந்தை
சிரித்து கைகாட்ட கூடும்..
அருகில் அமரலாமா என
வெள்ளை சுடிதார்
கல்லூரித் தாரகை
அனுமதி கோரக்கூடும்...
கூட்ட நெரிசலில்
சாலையோர மரங்களோ
குலுங்கும் செம்மஞ்சள் பூக்களோ
அவசரத்தில் வழியனுப்பி வைக்கக்கூடும்!
சில்லென்று காற்று
கூடவே அழைத்து வரும்
ஒருசில மழைத் துளிகளை
முகம் தூறக்கூடும்!
பயண தூரமும்
மனதின் துயரமும்
எந்தவொரு பாரமின்றி
அவ்வளவு சாதாரணமாய் இருந்திருக்கிறது!
நொடிப்பொழுதில்
ஒரு சின்ன களைப்போடு
இடிபாடுகளில் சிக்கி
வெளிவருகையில் தான்
அசம்பாவிதங்கள்
நினைவுக்கு வந்து செல்கின்றன!
-ரசிகன்
நன்றி
திண்ணை!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310101014&format=html
அருமையா படைப்பு
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ரசிகன்..
நன்றி!
பனித்துளி சங்கர் / ராமலக்ஷ்மி மேடம் / மலிக்கா மேடம்! :)
அருமையாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!!!
நன்றி!
priya :)
//சாலையோர மரங்களோ
குலுங்கும் செம்மஞ்சள் பூக்களோ
அவசரத்தில் வழியனுப்பி வைக்கக்கூடும்!
சில்லென்று காற்று
கூடவே அழைத்து வரும்
ஒருசில மழைத் துளிகளை
முகம் தூறக்கூடும்! //
மிகவும் ரசித்தேன்... இந்த வரிகளை இன்னும் கொஞ்சம் நிறைய ரசித்தேன்... அழகு கவிதை...
நன்றி கவிநா :)