ரசிகன்!

அது
அவளாய் தான் இருக்கக்கூடும்!

ஆழ் நித்திரையில்
மெல்லிய இழைக்காற்று
கவிதை பேசுவதும்,

நினைவுகளை கையகப்படுத்தி
கனவுகளை திரை போடுவதும்,

போர்த்திய போர்வையை
கால் மாட்டில் இழுத்துவிடுவதும்,

நிச்சயம்
அவளாய் தான் இருக்கக்கூடும்!

நாளை
எப்படியும்
அவளிடம் சொல்லிவிடுவதென்ற
தீர்மானத்தோடு
ஒவ்வொரு இரவும் விடைபெறுகிறது!


-ரசிகன்!
.

நன்றி....
யூத்ஃபுல் விகடன்!!!
.
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem120410.asp
4 Responses
  1. அருமையான் பதிவு , நாளைக்காவுது சொல்லிடுங்க


  2. nanri thala :):):)

    ellaam oru karpanai dhan :)


  3. Priya Says:

    சீக்கிரத்தில் சொல்லிட என் வாழ்த்துக்கள்!Post a Comment