ஒரு
ஞாயிறு மாலை;
அந்தி உடல் போர்த்தும் வேளை!
வீடு விட்டு
வெளியில் வருகிறேன்,
முன் பின் அறிமுகமில்லாத நீ
யாரென்றே தெரியாத நான்!
குளிர்காலம்
தாளம் போட
ஐஸ்மழை கொட்டிய சாலையில்
கொஞ்சலாய் வருடும் ஈரப்பதம்!
நீ
கால் தடங்களை
மேலோட்டமாய் வரைந்து செல்கிறாய்!
நான்
என் தடம் கொண்டு
அழுத்தமாய் பதிவு செய்தபடி வருகிறேன்!
மெதுவாய் தான் நடந்து வந்தாலும்
மனசு வேகமாய் ஓடிவந்து
மூச்சு வாங்கியபடி,
சாலையை கடக்க நிற்கும்
உன் பக்கம் வந்து நிற்கிறது!
ஏனோ!
சின்னதாய் ஒரு புன்னகை பூக்கிறாய் நீ!
ஏதோ!
உலகை வென்ற இறுமாப்பில் - ரசிகன்!
------------------------------------
நன்றி
யூத்புல் விகடன்!!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/duraipoem230310.asp
en padha suvadugalil
yaroo varugirargal enna
thirumbiparkayil kanavu kalainthu
ponathu ...
ungal kavidhaiyai vargalil
alnthu ponathal vantha vilaivu.....
adadey!!! :):):)
ரசிகனின் வார்த்தைகள் என்றுமே ரசிக்க தக்கவை, ரசித்தேன்!!!! ^ _ ^
அன்று,
கடற்கரையில் நாம் நடந்தும்,
மண்ணில் ஒருவரின் பாத சுவடுதான்....
மாலை வெயிலில் நாம் அமர்ந்திருந்தும்,
நிலத்தில் ஒரே நிழல்தான்....
இன்றும்,
ஒருவரின் பத சுவடுதான்,
ஒரே நிழல் தான்,
ஆனால் தனிமையில் நான்....
adhai rasitha gayathriyin pinnoottathukku oru rasiganaai... :)