எனதைந்தாம் சந்திப்பில்
அவள் தவற விட்டுச்சென்றது!
வெள்ளை நிறம் கொண்டது...
ஒரு ரோஜாப்பூ பூத்திருக்கும்
நாணமதை
எத்தனை முறை கசக்கினாலும்
மடிப்பாய் அமையப்பெற்றிருக்கும்!
அவள் உள்ளங்கை தாய்வீடு
வெட்கம் சிந்துமிடம் அந்தப்புரம்
கண்ணீரில் தாமரையிலை
காதல் கொண்டால் மறைபொருள்!
நேரம் காலமேதுமின்றி
வெட்கம் வந்து கதவு தட்டும்
மூடி மறைத்திட முடியாது
முடிந்து வைத்துக் கொள்வாள்!
ஆம்!
எனதைந்தாம் சந்திப்பில்
அவள் கொட்டிச் சென்ற
முதல் வெட்கத்தை கட்டியணைத்தபடி
கட்டில் துயில் காணும்
அவள் தவறவிட்ட கைக்குட்டை!
***
நன்றி!
யூத்ஃபுல் விகடன்
---
lovely :)
கைக்குட்டையே கவிதையாவது காதலில்தானே!
வாவ், ரொம்ப ரசனையா இருக்கு.
நன்றி
ஜெயா :)
ரசித்தமைக்கு நன்றி ப்ரியா :)
விகடனில் வாசித்தேன். அருமை. வாழ்த்துக்கள்:)!
நன்றி மேடம்! :)
லோக்கல் பாஷையில சொல்லனும்னா....
எப்புடி இப்புடி!!!
கொஞ்சம் கலோக்கியலா சொல்லனும்னா....
கலக்கிபுட்ட போய்யா....
கொஞ்சம் கவித்துவமா சொல்லனும்னா....
ஒன்று காதல் உங்களின் குழந்தையாகவோ
இல்லை நீங்கள் காதலின் குழந்தையாகவோ இருக்க வேண்டும்...
mesmarising comment!
thanks jayaseelan :)
//நேரம் காலமேதுமின்றி
வெட்கம் வந்து கதவு தட்டும்
மூடி மறைத்திட முடியாது
முடிந்து வைத்துக் கொள்வாள்! //
கவிதை அருமை. வாழ்த்துக்கல்
நன்றி சரவணன் :)
இப்பதான் காதல் பூத்திருக்கா...
koodiya viraivil pookkum nu edhirpaarkkaran :)
Super.......
அவள் உள்ளங்கை தாய்வீடு
வெட்கம் சிந்துமிடம் அந்தப்புரம்
கண்ணீரில் தாமரையிலை
காதல் கொண்டால் மறைபொருள்!
kan thudaikum kaikuttai
perumai kollum
rasiganin kan pattadhukku....