ரசிகன்!


*
விரல்களின்
இடுக்குகளில் ஊடுறுவியவாறு
கடந்து செல்கிறது சாலை...


ஒருபுறம் அவளும்
மறுபுறம் நாணமுமென
வாய் மொழிகளுக்கு வழி கொடுக்காது
அடைத்து செல்ல முயன்றபடி காதல்!


விழிகளின் பார்வைகளினூடு
புரிதலும் புணர்தலும்
பக்குவப்பட்டு பேசிக்கொள்ள


ஒரு வழியாய்
பற்றிக்கொண்டாள்
அழுத்தமாய் ஐவிரல்களை...!


மஞ்சம் அடைந்த மிகுதியிலும்
பேச வார்த்தை கிடைக்காது
மௌனம் மட்டுமே பயணிக்கிறது
விரல்கள் விடுபடும் தூரம் வரையில்!!


-ரசிகன்

நன்றி
திண்ணை!!!

*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004255&format=html
*
Labels: | edit post
Reactions: 
11 Responses
 1. VELU.G Says:

  அருமையான கவிதை

  வாழ்த்துக்கள்


 2. நன்றி வேலு! :)


 3. இசை Says:

  நல்லாருக்கு. 4. padma Says:

  என்னவோ கலக்குறீங்க போங்க


 5. muthamizh Says:

  எதார்த்தம் உன் கவிதை இடுக்குகளில் தவறுவதில்லை ....அருமை


 6. துரை... சூப்பர்...

  விரல்கள் கொண்ட மவுனம்.. மனதை தைக்கிறது.. உங்களுடன் மட்டும் எப்படி கைக் கோர்த்துக் கொள்கின்றன வார்த்தைகள்?


 7. @ padma:

  நன்றி பத்மா!!! எல்லாம் உங்களின் பின்னூட்டங்கள் செய்யும் வேலை தான்! :)

  @ முத்தமிழ்:

  நன்றி முத்தமிழ்!!!

  பின்னூட்டத்திற்காக உங்களுடன் ஒரு நாள் தேநீர் அருந்த வேண்டும் போலிருக்கிறது! :)


 8. @ பிரேமா மகள்:

  நன்றி பிரேமா :)

  ஹ்ம்ம் கேள்வி நல்லா தான் இருக்கு.... பட் எப்டி பதில் சொல்றதுன்னு தான் தெரில :( :P


 9. Priya Says:

  //பேச வார்த்தை கிடைக்காது
  மௌனம் மட்டுமே பயணிக்கிறது//...இது போதுங்க காதலுக்கு:)

  கவிதை நல்லா இருக்கு!!!Post a Comment