ரசிகன்!தேனூறும் சிறுப்பூவில்
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல

யாருமில்லா தனிமையிலும்
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது
ஒரு நினைவும் ஒரு நிழலும்!

முகம் கொடுத்து பேச இயலாது
எல்லோரும் முகம் சுழிக்க
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!

சூழ்நிலை இசையிலும்
நினைவுகளின் அலைவரிசையில்
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!

இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!

மீண்டெழும் சாத்தியக்கூறுகள்
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....

தனிமை பிடித்திருக்கிறது-
எனக்கு நானே செய்துகொண்ட
மானசீக ஒப்பந்தம்!


*
நன்றி,
வார்ப்பு!

http://www.vaarppu.com/view/2193/
Labels: | edit post
Reactions: 
4 Responses
 1. தனிமை சில சமயங்களில் வரம் .. சில சமயங்களில் சாபம்


 2. ///////இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
  செல்லரித்துப்போன நிஜங்கள்
  யாவும் புறக்கணிக்கப்பட்டவை!
  /////


  அருமை . பகிர்வுக்கு நன்றி


 3. முதல்ல நான் தான்

  ம்ம்ம்ம்...

  தனிமை ஒப்பந்தம் பலம்...

  நல்லயிருக்கு

  யாருமில்லா தனிமையிலும்
  வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது
  ஒரு நினைவும் ஒரு நிழலும்!


 4. நன்றி,

  செந்தில்குமார் / .பனித்துளி சங்கர் / கே.ஆர்.பி.செந்தில்

  :)


Post a Comment