ரசிகன்!


ஆடையிருக்க
வெட்கமெதற்கென
ஒரு வரியாய் வினவ

" ஐயோ ச்சீ போ......"
இது காதல் துவங்கும்
அவள் வாழ்த்துப்பாடல்!

இசைக்கு
பெண்மயிலின் முத்த சத்தங்கள்!

இயற்கைக்கு எதிராய்
பூக்கும் நேரம்
இவ்வேளையின் ஒத்திகைக்கு!

சட்டென மாறிடும் வெப்பம்
வியர்த்தலுக்கு பொறுப்பேற்காது...
மாறாய் ஓவியம் தீட்ட
ரேகைகள் இந்நேர இறகுகள்!

அனுமதிக்கு ஒரு வெட்கமும்
அத்துமீறலுக்கு ஒரு வெட்கமும்
அவள் செய்துகொண்ட ஒப்பந்தம்!

புறந்தள்ளும்
ஆசைகளையெல்லாம்
வெட்கங்கள் ஆக்கிரமிக்க...

இன்னும்
வரையப்படலாம்
ஓராயிரம் தீண்டல்கள்!

- ரசிகன்


-------

நன்றி..
கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9506:2010-06-11-06-03-54&catid=2:poems&Itemid=265
5 Responses

  1. ///சட்டென மாறிடும் வெப்பம்
    வியர்த்தலுக்கு பொறுப்பேற்காது...
    மாறாய் ஓவியம் தீட்ட
    ரேகைகள் இந்நேர இறகுகள்!
    /////


    மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி


  2. jillthanni Says:

    //அனுமதிக்கு ஒரு வெட்கமும்
    அத்துமீறலுக்கு ஒரு வெட்கமும்
    அவள் செய்துகொண்ட ஒப்பந்தம்! //

    ரசிக்க வேண்டிய வரிகள்
    அருமை
    தொடருங்கள்


  3. nanri !!! அஹமது இர்ஷாத்



Post a Comment