ரசிகன்!

முன்குறிப்பெழுதுவது
இக்கவிதை வாசிக்கும் பொருட்டு
வாசகனின் கவனத்தை ஒரு நிலைப்படுத்தல்...

இப்படியாக தொடங்கும்
கவிதை கருவில்
காதலை வசை பாடுவதாக
முன்னமே அறிவிக்கப்படுகிறது...

மூர்க்கத்தனமான முத்தமொன்றில்
மூச்சு வாங்கியபடி
அடுத்த பந்திக்கான வரிசையில்...

கூட்டம் சலசலப்பையும்
தனிமை சலனத்தையும்
இயல்பாகவே திணித்திருக்கிறது!

அடுக்கடுக்கான சத்தியங்கள்
பரிமாறப்படும் வேளையில்
எதிர்பாலின கவனம் ஈர்க்கப்படுவது
காதலை உறுதிசெய்வதாய் யூகிக்கலாம்!

இவ்வாறாக மலர்தல்
பூஞ்சோலை தோட்ட மறைவிலோ
இணைய தள மையங்களிலோ
பூப்பெய்தி விடுகின்றன!

வரைமுறைகள் தளர்த்தப்பட
அவனோ அன்றி அவளோ கூறுவதாய்

"அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்...
இப்போ போய்.. ச்சீ விடுடா"

என்பதுபோல் முடிவுபெறுகிறது
நான் வசை பாடிய காதலும்
நீங்கள் அசை போட்ட கவிதையும்!


நன்றி ,
கீற்று !
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9192:2010-06-02-12-36-35&catid=2:poems&Itemid=265
Labels: | edit post
Reactions: 
5 Responses
 1. நல்ல கவிதை ... பகடி மேலோங்கும் இம்மாதிரி கவிதை அபூர்வம்.


 2. gokila Says:

  kaadhal iru veru paalinarai eerkum visai endra kaanottam thiruthum varaiyil....
  kaadhalum kaamamum ondru endru paarkum paarvaigal maaradhu....

  vilaivugal...
  neengal kooriyathayitru.......


 3. நல்லா இருக்குது.... தொடர்ந்து எழுதுங்கள்!


 4. நன்றி...

  திரு செந்தில்.../ துரோகி


 5. இக்கவிதைக்கு ஒரு விளக்கமாயிற்று!

  நன்றி கோகிலா :)


Post a Comment