ரசிகன்!


"
புரியும் புரியாது
கோபத்தின் காரணம்!
செய்வதேதும் அறியாது
கண்ணீரில் போர் தொடுக்கிறாள்!

காத்திருப்பு...
எனக்கும் காதலுக்கும்...
புரிந்திருக்குமாயின்
தலைக்கோதி தேற்றும்பட்சத்தில்
காதல் அடிமையாகிப்போயிருக்கும்!

இனி
என்னவெல்லாம் நான் கேட்க
பதிலுக்கு கேள்வி தருகிறாள்...
மௌனம் தலைகாட்ட
முத்தம் கொண்டு மீட்டுகிறாள்!


நான்
பொய் சொல்லும்போதெல்லாம்
வெட்கம் கொண்டு கேட்கிறாள்...
காதலி கர்வம் கொண்டு
காதலையே அதட்டுகிறாள்!

புரிதல்
சாத்தியப்பட்டிருக்கும்
ஒரு அசாதாரண வேளையில்

நித்தம் ஒரு யுத்தம்...
ஹார்மோன்கள் விளையாட்டு!
புரிந்தும் நழுவுகிறாள்
இனி கண்ணாமூச்சி விளையாட்டு!

-
ரசிகன்

*
நன்றி!
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006202&format=html
Labels: | edit post
Reactions: 
4 Responses
 1. VELU.G Says:

  ரசித்தேன்


 2. ///புரியும் புரியாது
  கோபத்தின் காரணம்!
  செய்வதேதும் அறியாது
  கண்ணீரில் போர் தொடுக்கிறாள்!
  //////

  புதுமைதான் என்றும் உணர்வுகள்


 3. நல்லாயிருக்கு கண்ணாமுச்சி.


 4. நன்றி
  வேலு / சங்கர் / கருணாகரசு

  :)


Post a Comment