
என் தாய் மொழி தமிழ்...
ஆங்கில வழியில் பயின்றவன்! பயின்று கொண்டிருப்பவன்!
தமிழை சுவாசிப்பவன் அல்ல! நேசிப்பவன்!
இன்று காலை... என் முகநூலில் (FACEBOOK) தகவல் பெட்டிக்கு ஒரு தகவல் வந்திருந்தது...
என் நட்பு வட்டாரத்தில் ஒருவர்.. அவரை பற்றி முழுமையாக தெரியாது...
ஒரு கவிஞர் , எழுத்தாளர் என்றளவில் மட்டும் தெரியும்... அவரை மதிக்கிறேன்! அவரிடமிருந்து தான் அச்செய்தி
வந்த செய்தி:
--------------
(NO EDIT! ONLY CUT , COPY & PASTE)
"உங்களை மாதிரி இடியட் இன்டியன் சிலரால் தான் தமிழே சாகுது. நாங்கள் தமிழை வளக்கிறம். நிங்களோ கவிதை மட்டும் தமிழில் எழுதிப்போட்டு மிச்சமெல்லாத்தையும் ஆங்கிலத்தமிலில் பதிலா. ஏன?; இப்படி கிறுக்குத்தனமா செய்து தமிழை மட்டுமல் எங்களையும் கொல்லுறியள். ஓ நானும் இடியட் இன்டியன் என தமிழில் எழுதினேனா. அப்பிடிச்சொன்னாத்தானே உங்களுக்கெல்லாம் புரியுது.அது தான். உங்களை எனது நட்பு வட்டாரத்தில் இருந்து நீங்கிக்கொள்கிறேன்."கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது... இருந்தும் என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்!
* நான் தமிழ் வளர்ப்பவன் அல்ல!
* நான் ஆங்கிலம் எதிர்ப்பவன் அல்ல!
எனக்கு தமிழ் முழுமையாய் தெரியாது... படித்த/தெரிந்த/புரிந்த/அறிந்த தமிழை கொண்டு கவிதை என்ற பெயரில் (கவிதை இல்லை) வார்த்தைகளை கோர்த்து விடுகிறேன்! அவ்வளவே!
நான் தமிழை எதிர்ப்பவன் போலவும்... கொலை செய்பவன் போலவும் எவ்வளவு அழகாய் சொல்லி விட்டார்கள்!
அதெல்லாம் விடுங்க!
நான் என்ன சொல்ல வரேன்னா...
பின்னூட்டத்திலோ / அல்லது வேறேனும் இடத்திலோ நான் ஆங்கிலம் உபயோகித்தல் பிடிக்காதிருக்கும் பட்சத்தில் தாங்களே என்னை நீக்கிக்கொள்ளலாம்!
தமிழை கொலை செய்யும் நோக்கம் எதுவும் இதுவரை இல்லை... நீங்கள் வந்திருப்பதாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :)
உங்களின் கண்டிப்போ/தண்டிப்போ/நீக்குதலோ என்னை எதுவும் செய்யப்போவதில்லை!
நான் நீங்கள் இல்லை! உங்களைப்போல் இல்லை!
இது என் விருப்பமாகவும் இருக்கலாம்... நிர்ப்பந்தமாகவும் இருக்கலாம்!
பி.கு : ஏதேனும் தவறாகவோ / மரியாதை குறைவாகவோ / தமிழை இழிவாகவோ பேசியிருந்தால்... இச்சிறுவனை மன்னிக்கவும்!
நன்றி,
ரசிகன்
*