ரசிகன்!


"
காத்திருப்புகளின் பயணக்களைப்பில்
இளைப்பாரிக்கொண்டிருந்தன
அவள் சார்ந்த நினைவுகள்!!!

முத்தங்களை தாங்கிப்பிடித்தபடி
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
நிலா வடிவ சுவர் கடிகாரம்...

அறை நெடுக
விழி படும் இடமெல்லாம்
குமிழும் அவள் கூந்தல் ஈரம்...

அவள் கொஞ்சல் மொழிகளை
மௌனமாய் உச்சரித்து விளையாடும்
அந்த தலையாட்டு பொம்மை...

மறுபுறத்தில்
விசிறியின் உந்துதலுக்கு
வெட்கமறியா சில காகிதங்கள்
ஒன்றை ஒன்று உரச
ஒரே கூச்சலும் குழப்பமுமாய்....

இடையிடையில்
காதல் வேட்கையில்
திட்டுத் திட்டாய் சில தணிக்கை வெட்டுக்கள்...

உதறி எழுந்து
இயல்பு நிலைக்கு திரும்புகையில்...

கலவரமறியாது
இசையெழுப்பிக் கொண்டிருந்தது
ஜன்னலின் திரைசீலை....

-ரசிகன்

-----------------

நன்றி!
கீற்று...


---> http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6882:2010-04-25-04-20-18&catid=2:poems&Itemid=265
Labels: | edit post
Reactions: 
9 Responses
 1. நல்லாருக்கு சார்


 2. வணக்கம்.. துரை....


  உங்கள் கவிதைகள் அத்தனையும் அருமை... பொதுவாக... பதிவுகளை கேலி செய்து பின்னூட்டம் போட்டுத்தான் எனக்கு பழக்கம்.. ஆனால் உங்கள் பதிவினை படித்த பிறகு... கிண்டல் செய்ய தோன்றவில்லை.;. எல்லா கவிதைகளும் அத்தனை அழகு...

  பெயருக்கேற்றார்போல ரசிக்கின்ற காதல் மனது உங்களுக்கு..... அந்த உணர்வுகளுக்குச் சொந்தகாரர் குடுத்து வைத்தவர்கள்/..


 3. Priya Says:

  //இடையிடையில்
  காதல் வேட்கையில்
  திட்டுத் திட்டாய் சில தணிக்கை வெட்டுக்கள்...//.....அழகான கவிதை எனினும் இந்த வரியில் கூடுதல் ரசனை இருக்கு!


 4. @ மங்குனி அமைச்சர் :

  ரொம்ப நன்றி சார்!!! :)


 5. @ பிரேமா மகள் :

  நன்றி கலந்த வணக்கங்கள்!!!

  இப்படியான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெறும்போது தான்... என் படைப்புகளுக்கு முழுமையான திருப்தி கிடைக்கிறது!!!

  நன்றி...
  :)


  @ பிரியா:

  ரசணையோடு படித்தற்கு ஒரு நன்றி!!!

  படித்து முடித்து பின்நூட்டாமிட்டமைக்கு ஒரு நன்றி!!! :)


 6. அழகான உணர்வுகளை தூண்டிவிட்டு இருக்கு நண்பா


 7. நன்றி கவிதைகாதலன்!!! :)


 8. ரசிக்கிற காதல் கற்பனைகள் உங்களுடையவை..


 9. நன்றி அண்ணாமலை :)


Post a Comment