"
கரையேற்றப்பட்ட
அந்த
கட்டுமரத்தின் நிழலில்
கரைய தொடங்கிய மௌனங்கள்...
உனது காதலை
நீ
சொல்லி முடித்தாகி விட்டது..
அலைகள் நீ
கரையென நான்..
தீர்ந்த நுரைகளில்
எதை விட்டுச்செல்கிறோமென விடைபெறுகிறோம்!
இரவின்
விழுங்க முடியா பசியோடு
இழுத்து போர்த்திய போர்வைக்குள்
அவள்
கொட்டிய வார்த்தைகளும்
காட்டிய உணர்வுகளுமாய்.....
ஐம்புலன்களை
காதல் செய்ய முயற்சிக்கும்
ஒரு வினோத இரவு!
வசமாய் சிக்கிய கைதியாய்
தலைமாட்டிலிருந்த தலையணை
நைசாய் நழுவி
அவள் இடத்தை நிறைவு செய்கிறது!!!
நன்றி கீற்று!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5054:2010-04-01-08-38-33&catid=2:poems&Itemid=265
palagiya kalam
poruki edutha varthai therivu
padachuvatugalilthodangiyadu
partchartamaai mudikiradhu
paratukkal.......
//அவள்
கொட்டிய வார்த்தைகளும்
காட்டிய உணர்வுகளுமாய்.....
ஐம்புலன்களை
காதல் செய்ய முயற்சிக்கும்
ஒரு வினோத இரவு!//.......... ம்ம் சூப்பர்ப் லைன்ஸ்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
@shammi:
kavidhaikku kavidhai pinnoottamaa :)
azhaga iruku :)
@priya:
hmmmm thank u very much :)
சார் , அருமையா இருக்கு சார்
mikka nanri sir :)
//வசமாய் சிக்கிய கைதியாய்
தலைமாட்டிலிருந்த தலையணை
நைசாய் நழுவி
அவள் இடத்தை நிறைவு செய்கிறது!!!//
நல்ல கற்பனை ..... அருமை ரசிகன்! கீற்றில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!
romba nanri karthik :)
ungal pinnoottangalukkaagavey ezhudha ninaikkiren!!! :)