ரசிகன்!

இருட்டணைத்த மொட்டைமாடியில்
முதலில்
ஒரு வால் கொண்ட விண்மீன் தான்
போரிட எத்தனித்திருந்தது!
மின்னல் வேகத்தில்
மடிந்து போனது
மற்ற மீன்களுக்கு
ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்!

சீற்றத்துடன்
வெள்ளொளியை கக்கியவாறு
ஆணவத்துடன் முதல் அடி எடுத்துவைக்கிறாள்
வெண்ணிலா!

பின்னடி வைக்காமலே
விண்மீன்கள் ஒன்றுவிடாமல்
பின்வாங்கி கொண்டன!

நீயா நானா என்ற
தீர்மானம் கொண்டு
அவள் நெருங்கிவரவும்

என்னவள்
தலை சுற்றியிருந்த
நூலாடை மெல்ல நழுவவும்
சரியாய் இருந்தது!

தோற்ற பொலிவில்
தோற்றுப்போனவள்
ஒத்துக்கொள்ளாமல் ஒளிந்துகொண்டாள்
மேகமூட்டத்தினூடே!

-ரசிகன்!

நன்றி வார்ப்பு!!!
http://vaarppu.com/view/2143/
Labels: | edit post
Reactions: 
7 Responses
 1. gokila Says:

  Thotra pozhlivil thotrathu vennila....-aanal
  thotraal indha pennila...
  thodu vaanam nee thodugaiyil...


 2. Priya Says:

  //தோற்ற பொலிவில்
  தோற்றுப்போனவள்
  ஒத்துக்கொள்ளாமல் ஒளிந்துகொண்டாள்
  மேகமூட்டத்தினூடே!//..... ர‌சித்து ப‌டித்தேன்!


 3. @Goki

  ovvoru pinnoottamum ovvoru kavidhaiyaaga!!!

  its only bcos of u :)


 4. @priya:

  Thank u very much :):):)


 5. padma Says:

  ரொம்ப அழகாக எழுதி இருகீங்கங்க ரசிகன் .உங்க பெரும் ரொம்ப apt.Its becoz of u ன்னு சொல்லவும் ஒரு தோழி .எல்லாம் ரொம்ப அழகா இருக்கு


 6. நன்றி பத்மா :)

  பின்னூட்டங்கள் தான் என்னை இன்னும் இன்னும் ரசிக்க செய்து எழுத வைக்கிறது!!!

  நன்றி நன்றி :)


 7. CHARLES Says:

  உண்மையான வரிகள் தோழா ...., பெண்ணிலா...


Post a Comment